"மேடம், ப்ளீஸ்".. அடக்க முடியாமல் சிரித்த பிரேமலதா.. "ஒத வாங்குவே" மாணவரை பாசத்தோடு கண்டித்து.. செம!
பிரேமலதாவின் கள்ளக்குறிச்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது
சென்னை: அடக்க முடியாமல் விழுந்து விழுந்து சிரித்தே விட்டார் பிரேமலதா.. அப்படி ஒரு கேள்வியை பிளஸ் 2 மாணவர்கள் அவரிடம் கேட்டு விட்டனர்.. இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Recommended Video
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், தமிழக மாணவர்களுக்கும் ஒரு நெருக்கம் இருந்து கொண்டே இருக்கிறது.. இந்த ஒரு வருடமாக குறிப்பாக லாக் டவுன் சமயத்தில் இருந்தே அவர்கள் மீதான கருணை முதல்வருக்கு அதிகமாகி உள்ளது.
அரியர் மாணவர்களின் அரசன், மாணவர்களின் விடிவெள்ளி என பல பட்டப்பெயர்கள் எடப்பாடியாருக்கு வந்து சேர்ந்து கொண்டே இருக்கின்றன..

அரியர் பாராட்டு
அதனால், முதல்வர் எந்த ஊர்களுக்கு சென்றாலும், வழிநெடுகிலும் அவருக்கு மாணவர்கள் படையும் வரவேற்பு தரும்.. நன்றி சொல்லும்.. முழக்கம் எழுப்பும். 4 நாட்களுக்கு முன்புகூட 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் அறிவிப்பு வெளியானது.. இந்த பாசம் ஒரு படி மேலே போய், காதலர் தினம் வரை வந்துவிட்டது.. ஐயா, காதலர் தினத்தன்று லாக்டவுன் போடுங்க என்று முரட்டு சிங்கிள்கள் கோரிக்கை வைக்க, அதையும் ஸ்போட்டிவ்வாக எடுத்து கொண்டவர் எடப்பாடியார்.

பிரேமலதா
இப்போது அதுபோலவே பிரேமலதாவிடம் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.. கோரிக்கையை வைத்தது பிளஸ் 2 மாணவர்கள்.. கள்ளக்குறிச்சி தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு கட்சியின் பொருளாளர் பிரேமலதா வந்திருந்தார்.. ஒரு பிரச்சார வேனில் நின்று கொண்டே, வழிநெடுகிலும் உள்ள மக்களுக்கு வணக்கம் சொல்லியபடி வந்தார்.

மேடம்.. ப்ளீஸ்
இரு பக்கமும் பொதுமக்கள் அவருக்கு ஆரவாரம் எழுப்பி கூச்சலிட்டனர்.. அந்த சமயத்தில்தான், அங்கிருந்த பிளஸ் 2 மாணவர்கள், "மேடம்.. பிளஸ் 2-வில் ஆல் பாஸ் போட சொல்லுங்க.. நாங்க மட்டும் எக்ஸாம் எழுதணுமா? எங்களை பார்த்தால் பாவமா இல்லையா? ஆல் பாஸ் போட சொல்லுங்க மேடம்.. ப்ளீஸ்" என்று சத்தமாக சொன்னார்.

வைரல் வீடியோ
இதை கேட்டதும் வேனில் இருந்த பிரேமலதா விழுந்து விழுந்து சிரித்து விட்டார்.. "ஒழுங்கா படிச்சு பாஸ் பண்ணு.. ஒத வாங்குவே" என்று பாசத்தோடு கண்டித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.. இந்த வீடியோதான் இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications