சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மேகாலயாவிற்கு மாற்றம்! ராம்நாத் கோவிந்த் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா ஐகோர்ட்டிக்கு இடமாற்றம் செய்யக் குடியரசுத் தலைவர் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள சஞ்ஜிப் பானர்ஜியை இடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்றம் கொலிஜியம் கடந்த வாரம் பரிந்துரை செய்தது.

சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற கொலிஜியம் பரிந்துரை அளித்திருந்தது. இந்த திடீர் இடமாற்ற பரிந்துரைக்குப் பலரும் தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளனர்.

வழக்கறிஞர்கள் எதிர்ப்பு

வழக்கறிஞர்கள் எதிர்ப்பு

இந்த இடமாற்ற பரிந்துரையை உச்ச நீதிமன்றம் கொலிஜியம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் பலரும் கோரிக்கை விடுத்திருந்தனர். இது தொடர்பாக முதலில் சென்னையைச் சேர்ந்த 237 வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றம் கொலிஜியத்திற்கு கடிதம் எழுதி இருந்தனர். அதைத் தொடர்ந்து மேலும் 31 வழக்கறிஞர்கள் கடிதம் எழுதினர்.

தீர்மானம் நிறைவேற்றம்

தீர்மானம் நிறைவேற்றம்

உச்ச நீதிமன்றம் கொலிஜியத்தின் இந்த பரிந்துரையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மெட்ராஸ் பார் அசோசியேஷனில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் போராட்டத்தையும் நடத்தினர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட வழக்கறிஞர்கள் சஞ்ஜிப் பானர்ஜியை இடமாற்றம் செய்யக் கூடாது என வலியுறுத்தினர்,

குடியரசு தலைவர் ஒப்புதல்

குடியரசு தலைவர் ஒப்புதல்

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி பொறுப்பேற்று 10 மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் தலைமை நீதிபதியை மாற்ற வேண்டிய அவசியம் என்ன எனப் பலரும் கேள்வி எழுப்பினர். இந்தச் சூழலில் திங்கள்கிழமை இரவு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா ஐகோர்ட்டிக்கு இடமாற்றம் செய்யக் குடியரசுத் தலைவர் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்.

புதிய தலைமை நீதிபதி யார்

புதிய தலைமை நீதிபதி யார்

அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்க என்று உச்ச நீதிமன்றம் கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. அதேபோல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டிஎஸ் சிவஞானம் கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்குக் குடியரசுத் தலைவர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+