பிரஸ் மீட் செய்ய காரில் கிளம்பிய ரஜினிகாந்த்.. மலர் தூவி.. 'தலைவா' கோஷமிட்டு ரசிகர்கள் உற்சாகம்
சென்னை: செய்தியாளர்கள் சந்திப்புக்காக நடிகர் ரஜினிகாந்த், காலை 10.05 மணிக்கு தனது வீட்டிலிருந்து கிளம்பினார் ரஜினிகாந்த். அவர் கார் மீது மலர் தூவி ரசிகர்கள் தலைவா என கோஷமிட்டு வழியனுப்பினர்.
Recommended Video
வீட்டு வாசலில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து வந்த ரஜினிகாந்த், இன்று காலை 10.30 மணிக்கு நட்சத்திர ஹோட்டலில் நிருபர்களை சந்திக்கிறார். இதையொட்டி காலை 10.05 மணிக்கு அவர் தனது பிஎம்டபிள்யூ காரில் போயஸ் இல்லத்திலிருந்து கிளம்பினார்.

அவர் கிளம்பும் முன்பாக, வெளியே கூடியிருந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் குவிந்திருந்ததை பார்த்ததும், கையை அசைத்து மகிழ்ச்சி வெளிப்படுத்தினார். இதையடுத்து காரில் அவர் வீட்டு கேட்டுக்கு வெளியே வந்தபோது, ரசிகர்கள் அவர் கார் மீது மலர்களை தூவினர். கார் சற்று தூரம் கிளம்பி செல்லும் முன்பாக கார் மேல் பகுதி முழுக்க மலராக குவிந்துவிட்டது.
தலைவா.. என்ற கோஷம் அப்பகுதியில் எதிரொலித்தது. ரஜினி காருக்கு முன்பாக, அவர் ரசிகர் மன்றத்தின் ஆட்டோ சிலவும் கொடிகளை கட்டிக் கொண்டு பயணித்தன. இதனால் பெரும் ஆரவாரத்தோடு பிரஸ் மீட்டுக்கு கிளம்பியுள்ளார் ரஜினிகாந்த் என்றுதான் சொல்ல வேண்டும்.
ரசிகர்கள் கொடுத்த இந்த வரவேற்பை பார்த்தால் முக்கிய அறிவிப்பை ரஜினிகாந்த் வெளியிடப்போவது உறுதி என்றே தெரிகிறது.
-
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
அண்ணாமலை போடுவது மாரீச மான் வேடம்.. ஆர்எஸ்எஸ்-ன் 2,501 அமைப்பு அது.. சண்முகம் ஒரே போடு!











Click it and Unblock the Notifications