2வது நாளாக மாற்றம்.. பெட்ரோல், டீசல் விலையில் 18 காசுகள் குறைப்பு.. இன்றைய நிலவரம் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இரண்டாவது நாளாக பெட்ரோல், டீசல் விலை இன்றும் குறைக்கப்பட்டுள்ளது.

5 மாநில சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைந்து விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 18 காசுகள் குறைந்தது.

Price cut for the second day: Petrol, Diesel prices decreased 18 paisa in India

சென்னையில் பெட்ரோல் விலை 91.93 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 86.11 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.டெல்லியில் பெட்ரோல் விலை 96.3 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 81.11 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஹைதராபாத்தில் பெட்ரோல் விலை 86.00 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 85.09 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

பெங்களூரில் பெட்ரோல் விலை 94.3 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 87.11 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மும்பையில் பெட்ரோல் விலை 97.21 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 88.26 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

கடந்த இரண்டு மாதமாக இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்தது. தினமும் எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தலாம் என்று விதி கொண்டு வந்த பின் தினமும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டது.

ஆனால் அதன்பின் தொடர்ந்து கடந்த 24 நாட்களாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 5 மாநில சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இப்படி பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. இந்த நிலையில் தற்போது பெட்ரோல் டீசல் விலை இரண்டு நாட்களாக தொடர்ந்து குறைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதன் காரணமாகவே இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டதாக தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+