சென்னை வந்தார் பிரதமர் மோடி... விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
சென்னை: பல்வேறு முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் பிரதமர் மோடி சென்னை வந்தார்.
Recommended Video

சென்னை விமான நிலையத்தில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

பல்வேறு முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் பிரதமர் மோடி டெல்லியில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டார்.பிரதமர் மோடி இன்று காலை 10.35 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
ஐ.என்.எஸ். அடையாறு கடற்படை தளத்தில் பிரதமர் மோடியை முதல்வர் எடப்பாடியார், துணை முதல்வர் ஓபிஎஸ் வரவேற்கின்றனர்.
அதன்பிறகு நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். ரூ4,486 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். ரூ3,640 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார் சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ சேவையை தொடங்கி வைக்கிறார். சென்னை கடற்கரை- அத்திப்பட்டு இடையேயான 4-வது ரயில் பாதையில் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார் .

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அர்ஜூன் டாங்கியை தேசத்துக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி. இந்திய தொழில்நுட்ப கழகத்தின் டிஸ்கவரி வளாகத்துக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். கல்லணை கால்வாய் சீரமைப்பு-புதுப்பித்தல் திட்டத்துக்குஅவர் அடிக்கல் நாட்டுகிறார்.சென்னையில் காலை 8 மணி முதல் பகல் 1 மணிவரை போக்குவரத்துகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னை முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நகர் முழுவதும் சுமார் 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விழா நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கம் போலீசாரின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications