பரபர மோடில் தமிழக பாஜக.. அண்ணாமலை உள்பட 30க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் மோடி நாளை ஆலோசனை
சென்னை: நாளை தமிழகம் வருகை தரும் பிரதமர் மோடி, சென்னை கிண்டியில் தமிழக பாஜக நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். மத்திய இணை அமைச்சர் எல் முருகன், அண்ணாமலை உள்ளிட்ட 35 பேரை சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் நாளை தொடங்குகிறது. சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய இடங்களில் இந்த போட்டிகள் நடைபெறுகிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த போட்டியின் துவக்க விழா நடைபெறுகிறது. நாளை தொடங்கி 31 ஆம் தேதி வரை இந்த கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் நடக்கிறது.

இந்த விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்க வருமாறு பிரதமர் மோடிக்கு சமீபத்தில் டெல்லி சென்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு கடிதம் வழங்கினார். இந்த நிலையில், இந்த போட்டியை தொடங்கி வைப்பதற்காகவும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி தீர்த்தம் சேகரிப்பதற்காக ராமேசுவரமும், தனுஷ்கோடியில் புனித நீராடவும் என பிரதமர் மோடி 3 நாள் பயணமாக நாளை தமிழகம் வருகிறார்.
முதலில் கேலோ விளையாட்டு போட்டியை தொடங்கி வைப்பதற்காக சென்னைக்கு நாளை மாலை 4.50 மணியளவில் பிரதமர் மோடி வருகிறார். பின்னர் கேலோ விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்களிலும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கேலோ விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்து விட்டு பிரதமர் மோடி, இரவு 7.45 மணி அளவில் சென்னை கிண்டில் உள்ள ராஜ்பவனுக்கு செல்கிறார்.
இந்த நிலையில் ராஜ்பவணில் தங்கும் பிரதமர் மோடியை, தமிழக பாஜக நிர்வாகிகள் சந்திப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய இணை அமைச்சர் எல் முருகன், தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை உள்ளிட்ட தமிழக பாஜக நிர்வாகிகள் 35 பேர் பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறுவதை முன்னிட்டு இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே!












Click it and Unblock the Notifications