பெண்களுக்கு மோடி எப்படி மரியாதை தருகிறார் பாருங்கள்.. வானதி சீனிவாசன் வெளியிட்ட வீடியோ ட்வீட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது காலில் விழுந்து கும்பிட்ட ஒரு பெண்ணுக்கு மோடி செய்த பதில் மரியாதையை பார்த்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் நெகிழ்ந்து போய்விட்டார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் தனது லோக்சபா தொகுதியான வாரணாசிக்கு இன்று பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார். பின்னர் அங்கு நடைபெற்ற பல்வேறு அடிக்கல் நாட்டும் பணிகளில் அவர் பங்கேற்றார்.

வாரணாசியில் கோலாகலம்

வாரணாசியில் கோலாகலம்

புதிய குடிநீர், கல்வி, சுகாதாரம் மற்றும் சுற்றுலா திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் மோடி. அடிக்கல் நாட்டிய திட்டங்களின் மதிப்பு சுமார் 1,500 கோடி என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் வாரணாசி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

வாரணாசி விமான நிலையம்

வாரணாசி விமான நிலையம்

வாரணாசி விமான நிலையத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை உத்திர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் உள்ளிட்டோர் நேரில் சென்று வரவேற்றனர். அப்போதுதான் வானதி சீனிவாசன் குறிப்பிட்ட ஒரு நெகிழ்ச்சி சம்பவம் அங்கு நடைபெற்றது.

கும்பிடுவதை தடுத்த மோடி

கும்பிடுவதை தடுத்த மோடி

விமானத்தின் அருகே வரிசையாக காத்திருந்து ஒவ்வொருவரும் மோடிக்கு வணக்கம் தெரிவித்து வரவேற்க, பதிலுக்கு மோடியும் அவர்களை பார்த்து கும்பிட்டபடி நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண்.. அவர் அனேகமாக பாஜக நிர்வாகி என்று கூறப்படுகிறது. கும்பிட்டதோடு விடாமல் அப்படியே பிரதமர் நரேந்திர மோடியின் கால்களில் விழுந்து கும்பிட்டார். இதைப் பார்த்ததும் திடுக்கிட்டார் நரேந்திர மோடி. உடனே, சற்று விலகிக் கொண்டார். பிறகு தானும் குனிந்து அந்தப்பெண் முன்பாக வணக்கம் செலுத்தினார்.

வானதி நெகிழ்ச்சி

வானதி நெகிழ்ச்சி

இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் வானதி சீனிவாசன். தனது காலை தொட்டு கும்பிட வந்த பெண்ணை தடுத்ததோடு.. அந்தப் பெண்ணின் முன்பாக வளைந்து குனிந்து கும்பிட்டார் பிரதமர் மோடி. பெண்கள் மீது மோடி வைத்திருக்கக்கூடிய மரியாதையை இந்த வீடியோ காண்பிக்கிறது என்று நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார் அவர்.

Recommended Video

    24 நாடுகள் சேர்ந்தது Kongunadu! இலக்கிய ஆதாரங்களை வெளியிட்ட Vanathi Srinivasan | Oneindia Tamil
    பெண்களுக்கு பாதிப்பு

    பெண்களுக்கு பாதிப்பு

    ஆனால் நமது நெட்டிசன்கள் அதையும் விட வில்லை. வானதி சீனிவாசனின் பின்னூட்டத்திற்குச் சென்று, பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலை ஏற்றத்தால் பெரும்பாலான பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தயவுசெய்து அதற்கு ஏதாவது நடவடிக்கை எடுக்க பாருங்கள். அதுதான் மக்களுக்கு நல்லது செய்யும் என்று அறிவுரை தெரிவித்து வருவதை பார்க்க முடிகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+