சென்னையில் சர்ப்ரைஸ்! பரபர அரசியல் கூட்டத்திற்கு நடுவே பழம்பெரும் நடிகை வைஜெயந்திமாலாவை சந்தித்த மோடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளத் தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் மோடி பழம்பெரும் நடிகையான 90 வயதான வைஜெயந்திமாலாவை நேரில் சந்தித்தார்.

பொதுவாகவே தேர்தல் சமயத்தில் பல்வேறு அரசியல் தலைவர்களும் தொடர்ச்சியாக நாடு முழுக்க பயணங்களை மேற்கொள்வார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் புதிய திட்டங்களைத் தொடங்கி வைக்கும் அவர்கள், புதிய திட்டங்களும் அடிக்கல் நாட்டுவார்கள்.

Prime Minister Narendra Modi meets Vyjayanthimala in Chennai

அதன்படி பிரதமர் மோடி நேற்று திங்கள்கிழமை தமிழ்நாடு வந்தார். பாஜக கூட்டம் மற்றும் சில பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகப் பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வந்துள்ளார்.

மோடி தமிழக பயணம்: பிரதமர் நரேந்திர மோடி கடந்த 10 நாட்களில் இரண்டாவது முறையாகத் தமிழ்நாடு வந்துள்ளார். முதலில் பிற்பகல் 3.30 மணிக்கு கல்பாக்கம் அணு உலை ரியாக்டர் மேம்பாடு திட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அதன் பிறகு அங்கிருந்து நேரடியாக ஹெலிகாப்டர் மூலமாக மாலை 5 மணிக்கு சென்னை வந்த மோடி பாஜக கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அவர் பேசுகையில், "திமுக அரசு இயற்கைப் பேரிடர் ஏற்பட்டபோது மக்களுக்கு உதவுவதற்குப் பதிலாகத் துயரத்தை மேலும் மேலும் அதிகரித்தது. அவர்கள் விளம்பரம் மட்டுமே செய்தார்கள். திமுக அரசு வெள்ள தடுப்பு மேலாண்மையை மேற்கொள்ளவில்லை. திமுக அரசு ஊடகங்களைச் சரி செய்து வெள்ள நீர் வடிந்துவிட்டதாகப் பிரசாரம் செய்தது. மக்களின் துயரம் பற்றி திமுக அரசுக்கு அக்கறையும் கவலையும் இல்லை" என்று கடுமையாகச் சாடினார்.

வைஜெயந்திமாலா உடன் சந்திப்பு: இதற்கிடையே இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி, பழம்பெரும் நடிகையான 90 வயதான வைஜெயந்திமாலாவை நேரில் சந்தித்தார். இது தொடர்பான படத்தை அவரே தனது எக்ஸ் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். அதில் வைஜெயந்திமாலா பிரதமர் மோடிக்குச் சால்வை அணிவித்துக் கௌரவித்தார். பிரமர் மோடியும் அதைத் தனது கூப்பிய கைகளுடன் ஏற்றுக்கொண்டார். மற்றொரு படத்தில் வெள்ளை- தங்க நிற புடவை அணிந்துள்ள வைஜெயந்திமலா பிரதமர் மோடியுடன் பேசிக் கொண்டு இருக்கிறார்.

இந்த படங்களைப் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், "வைஜெயந்திமாலா ஜியை சென்னையில் சந்தித்ததில் மகிழ்ச்சி. அவர் பத்ம விபூஷன் விருது பெற்றுள்ளார் மற்றும் இந்திய சினிமா உலகிற்கு அவரது பங்களிப்பு நாடு முழுக்க போற்றப்புடம்" என் பதிவிட்டுள்ளார்.

Prime Minister Narendra Modi meets Vyjayanthimala in Chennai

சந்திப்பு: வைஜெயந்திமாலா பழம்பெரும் நடிகை மட்டுமில்லை.. அவர் தேர்ந்த பாரம்பரிய நடனக் கலைஞரும் கூட.. கடந்த சில நாட்களுக்கு முன்பு, வைஜெயந்திமாலா ராக் சேவாவில் நடனமாடி இருந்தார். மேடையில் அட்டகாசமாக அவர் ஆடிய பரதநாட்டியம் பலரையும் வியக்க வைத்தது. வயது என்பது எதற்கும் எப்போதுமே தடையாக இருந்தது இல்லை என்பதை இது காட்டுவதாக இருக்கிறது. அதை நெட்டிசன்கள் பலரும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

பத்ம விபூஷன் விருது: கலைத்துறையில் வைஜெயந்திமாலாவின் சேவையைப் பாராட்டும் வகையில் மத்திய அரசின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷன் விருது இந்தாண்டு தான் அவருக்கு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+