செஸ் ஒலிம்பியாட்.. பிரதமர் மோடி தொடங்கி வைத்தது நமக்கு பெருமை... கவிஞர் வைரமுத்து கருத்து!
சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தது தமிழ்நாட்டிற்கு பெருமை என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
Recommended Video
சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி செஸ் தலைநகரமான தமிழ்நாட்டில் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. இன்று முதல் ஆகஸ்ட் 10 வரை செஸ் ஒலிம்பியாட் தொடர் மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாய்ண்ட் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறது. இதில் 186 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சர்வதேச வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

தொடக்க விழா
இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பட்டு சட்டை, வேட்டியுடன் கலந்துகொண்டனர். அதேபோல் தமிழக அமைச்சர்கள், நடிகர் ரஜினிகாந்த், நடிகர் கார்த்தி, கவிஞர் வைரமுத்து ஆகியோர் கலந்துகொண்டனர். அதேபோல் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் கலந்துகொண்டனர்.

கலை நிகழ்ச்சிகள்
இந்த தொடக்க விழாவில் இந்தியாவின் பன்முகத்தன்மையை எடுத்துக்காட்டும் வகையில் தமிழ்நாடு, கேரளா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்களின் பாரம்பரிய நடனங்கள் அரங்கேற்றம் செய்யப்பட்டன. பின்னர் கமல்ஹாசன் குரலில் உருவாக்கப்பட்ட தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், பெருமை, கல்லணை, கோயில்கள், கவிஞர்கள், சங்க இலக்கியம், சோழர்கள் என முப்பரிமான வீடியோ மூலம் காட்சிகள் அரங்கேற்றம் செய்யப்பட்டன. தொடர்ந்து இசை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டது.

வைரமுத்து கருத்து
இந்த நிகழ்ச்சி குறித்து கவிஞர் வைரமுத்து கூறுகையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்தது நமக்கு பெருமை. செஸ் போட்டியின் தொடக்க விழாவில் தமிழர்களின் கலைகள், வீரர், இலக்கியம், வணிகள் ஆகியவற்றை பேசியதன் மூலம் தமிழ்நாடு உலக அளவில் உற்று கவனிக்கப்பட்டுள்ளது.

வாழ்த்து
விளையாட்டு என்பது விளையாட்டாக பார்க்கக் கூடாது. இது மூளைக்கு பயிற்சி. அகத்தில் முயற்சி. முயர்சி மற்றும் பயிற்சி ஆகிய இரண்டும் நாட்டின் அறிவுவளத்தை மேம்படுத்தும் என்று நம்பலாம். இந்தியாவில் 36 சதவிகித கிராண்ட்மாஸ்டர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியபோது கைதட்டிக் கொண்டேன். இந்த விளையாட்டு விழா வெற்றிபெற வேண்டும் என்று வாழ்த்துவதாக தெரிவித்தார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications