தமிழகம் வருகிறார் பிரதமர்!தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக் கூட்டத்தில் மோடி உரை!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்குவதையொட்டி தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்ற கட்சிகளுடன் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மதுராந்தகம் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதால், அரசியல் கட்சிகள் தங்கள் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன. இச்சூழலில், பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வருகிறார். அவர், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி நடத்தும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக மற்றும் பாஜக இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியை அமைத்துள்ளன. இக்கூட்டணியில் பா.ம.க (அன்புமணி தரப்பு), அ.ம.மு.க, தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
கேரளாவில் இருந்து மதியம் 1.15 மணிக்கு சென்னை வந்த பிரதமர், மதியம் 2.15 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மதுராந்தகம் புறப்படுகிறார் அங்கு பொதுக்கூட்ட மேடையில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களை அவர் சந்திக்கிறார்.
மாலை 3.10 மணிக்கு பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் பிரதமர், தனது உரையை முடித்துக் கொண்டு மாலை 4.15 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் சென்னை விமான நிலையம் திரும்புகிறார். அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார்.
பிரதமர் மோடி வருகையையொட்டி இன்றைய தினம் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இது குறித்த செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 23.01.2026 அன்று பாரத பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் சென்னை திண்டிவனம் GST நெடுஞ்சாலையில் மதுராந்தகத்தில் நடைபெறுவதால் கனரக வாகனங்கள் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை GST சாலையில் சென்னை திருச்சி மார்க்கமாகவும் மற்றும் திருச்சி சென்னை மாரக்கமாகவும் கீழ்கண்ட வழிகளில் போக்குவரத்து மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தப்படுகிறது.
முழு விவரம் என்ன ?
சென்னையிலிருந்து திண்டிவனம் நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் 23.01.2026 காலை 7:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை சென்னை to திண்டிவனம் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் வண்டலூர், கேளம்பாக்கம், மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலையில் சென்று மரக்காணம் வழியாக திண்டிவனம் வந்து GST சாலையை அடையலாம்.
(அல்லது)
சென்னை to திண்டிவனம் மார்கமாக செல்லும் வாகனங்கள் வண்டலூர் படப்பை ஒரகடம், வாலாஜாபாத், காஞ்சிபுரம் வழியாக வந்தவாசி தெள்ளார் வெள்ளிமேடு பேட்டை தீவனூர் கூட்டேரிப்பட்டு சந்திப்பு சாலை வழியாக GST சாலையை அடையலாம்.
(அல்லது)
திருப்பெரும்பதூர். ராணிப்பேட்டை, ஆற்காடு, ஆரணி, திருவண்ணாமலை, திருக்கோவிலூர் விழுப்புரம் சென்று GST சாலையை அடையலாம்.
திருச்சியிலிருந்து சென்னை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் 23.01.2026 காலை 07.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை
1) திருச்சியிலிருந்து சென்னை மார்கமாக செல்ல வேண்டிய கனரக வாகனங்கள் உளுந்தூர்பேட்டை, மடப்பட்டு வழியாக திருக்கோவிலூர். திருவண்ணாமலை, வந்தவாசி காஞ்சிபுரம் (பாலாறு செவிலிமேடு சந்திப்பு) கீழம்பி புறவழிச்சாலை வழியாக செல்லலாம்.
2) சேலத்திலிருந்து சென்னை மார்க்கமாக செல்ல வேண்டிய கனரக வாகனங்கள் பிரிதிவி மங்களம் வழியாக தியாகதுர்கம், மணலூர்பேட்டை திருவண்ணாமலை, வந்தவாசி காஞ்சிபுரம் (பாலாறு செவிலிமேடு சந்திப்பு) கீழம்பி புறவழிச்சாலை வழியாக சென்னை செல்லலாம்.
3) கூட்டேரிப்பட்டிலிருந்து சென்னை மார்க்கமாக செல்ல வேண்டிய கனரக வாகனங்கள் வெள்ளிமேடுபேட்டை, வந்தவாசி. காஞ்சிபுரம் (பாலாறு செவிலிமேடு சந்திப்பு) கீழம்பி புறவழிச்சாலை வழியாக சென்னை செல்லலாம்.
4) திண்டிவனத்திலிருந்து சென்னை மார்க்கமாக செல்ல வேண்டிய கனரக வாகனங்கள் மரக்காணம் சென்று கிழக்கு கடற்கரை சாலை (ECR) வழியாக சென்னை செல்லலாம்.
சென்னையிலிருந்து திண்டிவனம் நோக்கி செல்லும் அரசு பேருந்துகள், இலகுரக வாகனங்கள் 23.01.2026 காலை 11 மணி முதல் மாலை 07 மணி வரை சென்னையிலிருந்து திண்டிவனம் மார்கமாக செல்ல வேண்டிய வாகனங்கள் வண்டலூர், கேளம்பாக்கம், மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலையில் சென்று மரக்காணம் வழியாக திண்டிவனம் சென்று GST சாலையை அடையலாம்.
(அல்லது)
வண்டலூர் படப்பை ஒரகடம் வாலாஜாபாத் காஞ்சிபுரம் வந்தவாசி தெள்ளார் வெள்ளிமேடு பேட்டை, தீவனூர் வழியாக கூட்டேரிப்பட்டு சென்று GST சாலையை அடையலாம்.
(அல்லது)
1) கூடுவாஞ்சேரி - மறைமலைநகர் SP கோவிலில் இருந்து விழுப்புரம் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் செங்கல்பட்டு ராட்டினம் கிணறு திருக்கழுக்குன்றம் வெங்கம்பாக்கம் சந்திப்பு சாலை, கிழக்கு கடற்கரை சாலை, மரக்காணம் திண்டிவனம் வழியாகவும் GST சாலையை அடையலாம்.
2) சிங்கபெருமாள் கோவிலிலிருந்து ஒரகடம் வாலாஜாபாத் காஞ்சிபுரம் வந்தவாசி தெள்ளார் வெள்ளிமேடு பேட்டை தீவனூர் கூட்டேரிப்பட்டு சந்திப்பு சாலை வழியாகவும் GST சாலையை அடையலாம்.
விழுப்புரத்திலிருந்து சென்னை நோக்கி செல்லும் அரசு பேருந்துகள், இலகுரக வாகனங்கள் 23.01.2026 காலை 11.00 மணி முதல் மாலை 07 மணி வரை விழுப்புரத்திலிருந்து சென்னை மார்கமாக செல்ல வேண்டிய வாகனங்கள் திண்டிவனம் பாண்டிச்சேரி சந்திப்பு சாலை வழியாக மரக்காணம் சென்று கிழக்கு கடற்கரை சாலை மாமல்லபுரம் வழியாக சென்னை செல்லலாம்.
(அல்லது)
திண்டிவனம் கல்லூரி சாலை வழியாக வெள்ளிமேடு பேட்டை தெள்ளார் வந்தவாசி காஞ்சிபுரம் வாலாஜாபாத் வண்டலூர் வழியாக சென்னைக்கு செல்லலாம்.
(அல்லது)
திண்டிவனம் -கல்லூரி சாலை வழியாக வெள்ளிமேடு பேட்டை தெள்ளார் வந்தவாசி காஞ்சிபுரம் (செவிலிமேடு பாலார் சந்திப்பு) - கீழம்பி புற வழிச்சாலை GWT சாலையை அடைந்து ஸ்ரீபெரும்பத்தூர் வழியாக சென்னைக்கு செல்லாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications