“துப்பாக்கியை எடுங்க”.. சிறையில் இருந்து கைதிகள் தப்பினால் சுட்டு பிடிக்கலாம்- சிறைத்துறை டிஜிபி ஆணை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறையில் இருந்து கைதிகள் தப்பித்தல் போன்ற அசம்பாவிதம் ஏற்பட்டால் சூழலுக்கு ஏற்ப துப்பாக்கியை பயன்படுத்திக் கொள்ள சிறைத்துறை டி.ஜி.பி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். சிறைகளில் பாதுகாப்பை கடுமையாக்குவது தொடர்பான முக்கிய உத்தரவுகள் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் இரவு நேரத்தில் தப்பி ஓடிய சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மூன்றாவது பிளாக்கில் இருந்த கைதி ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களை தாக்கி பிரதான நுழைவுவாயிலைத் திறந்து 17 கைதிகள் தப்பிச் சென்றனர்.

jail Police

தேனி சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதிகளில் 13 பேர் பிடிபட்டுள்ளனர். மீதமுள்ள சிறைவாசிகளை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர். துப்பாக்கி ஏந்திய 12 போலீசார் வனப்பகுதிக்குள் 2 குழுக்களாக பிரிந்து தப்பிய கைதிகளை தேடி வருகின்றனர்.

முன்னதாக, சென்னை புழல் மத்திய சிறையில் இருந்து கடந்த வாரம் 2 கைதிகள் தப்பினர். நேபாள நாட்டைச் சேர்ந்த விசாரணைக் கைதி. மற்றொருவர் தண்டனைக் கைதி. நேபாள நாட்டைச் சேர்ந்த கைதி, சி.சி.டி.வி கேமரா வயரைப் பிடித்துக்கொண்டு சுமார் 40 அடி உயரமுள்ள சுவரில் ஏறிக் குதித்துத் தப்பிச் சென்றுள்ளார்.

அவர்களை அடுத்தடுத்த நாட்களில் போலீசார் தீவிரமாகத் தேடி மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர். தமிழ்நாடு முழுவதும் சிறைகளில் இருந்து கைதிகள் தப்பியோடும் சம்பவங்கள் நிகழ்ந்து வருவது சிறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேள்விகளை எழுப்புகின்றன.

கைதிகள் தப்பியதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் தங்களது கடமையைச் சரிவர செய்தார்களா? பாதுகாப்பு நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டனவா? என்பன உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆய்வு நடைபெற்று வருகின்றன. மூன்றடுக்கு பாதுகாப்பு நடைமுறைகள் இருந்தபோதும் கைதிகள் தப்பியிருப்பது, பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இந்நிலையில், சிறையில் இருந்து தப்ப முயலும் கைதிகளை சுட்டுப் பிடிக்க சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது. தேனி சிறையில் இருந்து கைதிகள் தப்பியோடியதை தொடர்ந்து சிறைத்துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனைக்குப் பிறகு சிறையின் பாதுகாப்பை அதிகரிக்க சிறைகளில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் உயர் கோபுரத்தில் இருந்து கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதே போல், சிறையில் இருந்து கைதிகள் தப்பியோட முயன்றால் துப்பாக்கி ஏந்திய போலீசார், சூழ்நிலைக்கு ஏற்றவாறு அவர்களை சுட்டுப் பிடிக்கலாம் என உத்தரவு விடப்பட்டுள்ளது. ஏற்கெனவே சிறை காவலர்கள் பற்றாக்குறை இருக்கும் சூழலில் மேலும் சிறை காவலர்கள் நியமிக்கப்பட்டு மத்திய சிறை உள்ளிட்ட சிறைகளில் கூடுதல் பாதுகாப்பை அதிகரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உத்தரவை சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் வெளியிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+