வாடகைக்கு தனியார் பஸ்கள்.. விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர்.. அடேங்கப்பா.. எகிறி அடிக்கும் தமிழக அரசு
சென்னை: பொதுமக்களின் வசதிக்காகவும், நன்மைக்காகவும், ஏராளமான சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது.. இந்நிலையில், அரசு போக்குவரத்து கழகம், தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கி வருகிறது.
இன்றைய தினம் ஆயுத பூஜை மற்றும் நாளைய தினம் விஜய தசமி, நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது.. இதனால் கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள் அனைத்துக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கின்றன.

பயணிகள்: சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நேற்றைய தினமே புறப்பட்டு சென்றார்கள். முன்கூட்டியே பயணிகளின் வசதிக்காக தமிழக போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ்களை இயக்குவதாக அறிவித்திருந்தது.
அதேபோல, தசரா திருவிழா கொண்டாடப்படுவதால் குலசேகரன்பட்டினத்திற்கு சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்தே சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன.. தூத்துக்குடி, திருச்செந்தூர், நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னை: அந்தவகையில், சென்னையிலிருந்து இயக்கப்பட்ட பேருந்துகளில் 1.62 லட்சம் பேர் பயணித்துள்ளதாக தகவலும் வெளியாகியிருந்தது.. அதாவது, சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு தினசரி இயக்கக்கூடிய 2,092 பஸ்களுடன் கூடுதலாக 1,028 பஸ்களும் என மொத்தம் 3,120 பஸ்கள் இயக்கப்பட்டன. இவற்றில் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 240 பயணிகள் பயணித்திருக்கிறார்களாம்..
எனினும், பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் தனியார் பேருந்துகள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வருகின்றன.. சென்னை கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டிலிருந்து, திருவண்ணாமலை , திருச்சி , வேலூர் ஆகிய நகரங்களுக்கு வார இறுதிநாட்கள் , ஆயுத பூஜை பண்டிகை நாட்களை முன்னிட்டு தனியார் பேருந்துகள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வருகின்றன.. இதனால் பயணிகள் கூட்ட நெரிசலின்றி சொந்த ஊர்களுக்கு சென்றிருக்கிறார்கள்.
சிறப்பு தகவல்: விடுமுறை நாட்களையொட்டி திருவண்ணாமலை, திருச்சி, வேலூர் ஆகிய நகரங்களுக்கு தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவதாக தகவல் வெளியாகியிருப்பது, வெளியூர் சென்றுள்ள மற்ற பயணிகளுக்கும் மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் தந்து வருகிறது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications