வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் தனியார் நிறுவன பஸ்கள் மோதி விபத்து.. மாணவர்கள் காயம்
சென்னை: சென்னையை அடுத்த வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் தனியார் நிறுவனத்தின் பேருந்து மற்றும் தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் மாணவர்கள் உள்பட 19 பேர் காயம் அடைந்தனர்.
சென்னைக்கு தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள், சென்னைக்கு வெளியில் இருந்தே கிளம்பி செல்லும் வகையில் புதிதாக கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையம் எங்கு அமைந்துள்ளது என்றால், வண்டலூர் உயிரியல் பூங்காவை அடுத்து கேளம்பாக்கம் வண்டலூர் சாலையை ஒட்டி அமைந்துள்ளது.

கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைந்த பின்னர், வழக்கத்தைவிட வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் போக்குவரத்து அதிகரித்துள்ளது. முன்பு ஈசிஆரில் கேளம்பாக்கம், நாவலூர் உள்ளிட்ட பகுதிகளில் பயணிக்க விரும்புவோர், வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் போவார்கள் .
இப்போது சென்னை மாநகருக்குள் உள்ள போக்குவரத்து நெரிசல் காரணமாக வண்டலூர் கேளம்பாக்கம் சாலையை சென்னைவாசிகள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். அதுவும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறந்த பின்னர், இந்த எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் ஏராளமான கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள் அமைந்துள்ளன..
இந்நிலையில் இன்று காலை, வண்டலூர் – கேளம்பாக்கம் சாலையில் தனியார் நிறுவனத்தின் பேருந்து மற்றும் தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மாணவர்கள் 15 பேர், நிறுவன ஊழியர்கள் 4 பேர் காயம் அடைந்தனர்.அவர்கள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications