தீவிர சிகிச்சை பிரிவில் பாரதிராஜா.. உடல்நிலை எப்படி இருக்கிறது? தனியார் மருத்துவமனை விளக்கம்
சென்னை: இயக்குநர் பாரதிராஜா மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளித்து இருக்கிறது.
பல வெற்றிப்படங்களை இயக்கிய தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரும் நடிகருமான பாரதிராஜாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை தியாகராயர் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாரதிராஜா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதுகுறித்து அவரது மகன் மனோஜ் தெரிவித்தபோது, "நீர்ச்சத்து குறைபாடு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதன் அடிப்படையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்கள் அவருக்கு ஓய்வு தேவை என்று அறிவித்து இருக்கிறார்கள்." என்றார்.

மருத்துவமனை மாற்றம்
இதனை தொடர்ந்து சென்னை அமைந்தகரையில் உள்ள வேறொரு தனியார் மருத்துவமனைக்கு பாரதிராஜாவை அவர் குடும்பத்தினர் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். பாரதிராஜா நல்ல உடல்நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும் என திரையுலகினரும், சினிமா ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பாரதிராஜா அறிக்கை
இந்த நிலையில் இயக்குநர் பாரதிராஜா, தனது உடல்நிலை குறித்து மக்களுக்கு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில் "என் இனிய தமிழ் மக்களே, வணக்கம். நான் உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன். உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் சிறப்பான சிகிச்சை மற்றும் கனிவான கவனிப்பின் காரணமாக நலம் பெற்று வருகிறேன்.

நேரில் வர வேண்டாம்
மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் என்னை நேரில் காண வர வேண்டாம் என்று என் மேல் அன்பு கொண்ட அனைவரையும் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். விரைவில் பூரண நலம் பெற்று உங்கள் அனைவரையும் நேரில் சந்திக்கிறேன்.

விரைவில் சந்திப்போம்
மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்தவுடன் நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் இணையதளம் மூலமும் அன்புடன் விசாரித்த மற்றும் நலம் பெற பிரார்த்தித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் சந்திப்போம்." என்றார்.

மருத்துவமனை விளக்கம்
இந்த நிலையில் இயக்குநர் பாரதிராஜா உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனை அறிக்கை மூலம் விளக்கம் அளித்து இருக்கிறது. அதில் பாரதிராஜா நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவரது உடல்நிலையை மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
-
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications