ஸ்கூல் பேக், லஞ்ச் பேக்குகளை தங்களிடமே வாங்க தனியார் பள்ளிகள் வற்புறுத்த கூடாது.. ஐகோர்ட் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை ஸ்கூல் பேக் மற்றும் லஞ்ச் பேக்குகளை தங்களிடமே வாங்கும்படி தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்த கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையில் உள்ள தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான பள்ளி நிர்வாகம் ஒன்று, மாணவர்களுக்கான பாடப்புத்தங்களுக்கு ஐந்தாயிரம் ரூபாயும் இது தவிர யூனிஃபார்ம் செருப்புகள் மற்றும் ஸ்கூல் பேக் , லஞ்ச்பேக் உள்ளிட்டவற்றை மாணவர்களுக்கு கொடுக்க ஐந்தாயிரம் ரூபாயும் செலுத்துமாறு பெற்றோர்களுக்கு சர்குலர் ஒன்றை அளித்துள்ளது.

Private schools should not be forced to buy bags High court order

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோரில் சிலர் சென்னை ஐகோர்ட்டில் பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தனர். அதில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பரிந்துரைத்துள்ள குறைந்த விலை புத்தகங்களை வழங்குவதை விட்டு, ரூ5.000 மதிப்புடைய ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் புத்தகங்களை தங்கள் தலையில் கட்டுவதாக குற்றம் சுமத்தியிருந்தனர்.

மேலும் மாணவர்களுக்கு புத்தகங்கள், சீருடைகள் தவிர மற்ற பொருட்களை பள்ளி தர கூடாது என்ற நடைமுறை விதிகள் உள்ளது. அதனை காற்றில் பறக்க விட்டு தங்களிடம் ஸ்கூல் பேக், லஞ்ச்பேக் உள்ளிட்ட இதர பொருட்களை வாங்க பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்துவதாக புகார் கூறினர்

தனியார் பள்ளிகளின் தன்னிச்சயைான நவடிக்கைகளால் நடுத்தர குட்மபத்தை சேர்ந்த பெற்றோர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தனர். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள், சீருடைகள், காலணிகளை பள்ளி நிர்வாகம் விற்பனை செய்து கொள்ளலாம் என கூறியுள்ளது.

ஆனால் மேற்கண்டவை தவிர்த்து ஸ்கூல் பேக் மற்றும் லஞ்ச் பேக் உள்ளிட்ட பிற பொருட்களை வாங்குமாறு பெற்றோர்களை கட்டாயப்படுத்த கூடாது என்று உத்தரவிட்டது. மேலும் இவ்வழக்கின் விரிவான விசாரணையை வரும் ஜூன் 10-ம் தேதி நடைபெறும் என்றும் ஐகோர்ட் அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+