சென்னை மக்களே ஹேப்பி நியூஸ்.. தனியார் தண்ணீர் லாரி ஸ்ட்ரைக் வாபஸாம்!
சென்னை: சென்னையில் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
சென்னையில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
அன்றாட தேவைக்கான தண்ணீருக்கு வட மக்கள் பெரும்பாடு பட்டு வருகின்றனர். சென்னை மக்கள் தங்களின் தண்ணீர் தேவைக்கு தண்ணீர் லாரிகளையே நம்பியுள்ளனர்.

உரிமையாளர்கள் கலக்கம்
இந்நிலையில் நீர்நிலை, விளைநிலங்களில் நீர் எடுக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் அண்மையில் தடைவிதித்தது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் கலக்கம் அடைந்தனர்.

காலவரையற்ற வேலை நிறுத்தம்
மேலும் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் அறிவித்திருந்தனர். அதன்படி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்ளப் போவதாக கூறியிருந்தனர்.

தற்காலிக வாபஸ்
நிலத்தடி நீரை எடுக்க உரிமம் வழங்க வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தை தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் அறிவித்திருந்தனர். இந்நிலையில் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தங்களின போரட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர்.

மக்கள் நிம்மதி
மக்களின் சிரமத்தை மனதில் கொண்டு போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளோம் என லாரி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications