பிரியாவின் கடைசி வார்த்தை.. கடைசி ஆசை.. கடைசி வீடியோ.. கல்லறையின் சவக்குழியை பார்த்து கதறிய உறவுகள்
பிரியாவின் சடலத்தை கண்டு அவரது உறவினர்கள் கதறி அழுதது காண்போரை கலங்க வைத்தது
சென்னை: பிரியா தன் தோழியுடன் ஆடிய கடைசி டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.. பிரியாவின் நண்பர்கள் இதனை ஷேர் செய்தும் வருகிறார்கள்.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் 17 வயது மகள் பிரியாவின் மரண சம்பவத்தின் அதிர்ச்சி இன்னும் விலகாமல் உள்ளது.. தவறான சிகிச்சையால் உயிரிழந்த பிரியாவின் ஒரே ஆசை, இந்தியாவுக்காக கால்பந்து விளையாட வேண்டும் என்பதுதான்.
இளம் கால்பந்து வீரரை இழந்துவிட்ட சோகத்தில் அவரது தோழிகளும், சக மாணவர்களும் கதறி அழுதது காண்போரை நிலைகுலைய வைத்தது.

ஜவ்வு கிழிந்தது
முட்டியில் சின்னதா ஜவ்வு கிழிஞ்சதுன்னு சொன்னாங்க.. சனிக்கிழமை சேர்த்தோம்.. திங்கட்கிழமை ஆபரேஷன்னு சொன்னாங்க.. தப்பான ஆபரேஷனை பண்ணிட்டாங்களே.. குழந்தை வலியால் துடிச்சிட்டே இருந்தாள்.. அவள் அழும்போதெல்லாம் ஊசியை போட்டாங்களே.. யாரும், அரசியல் பேசாதீங்க, உயிரே போயிடுச்சு... என்று பிரியாவின் குடும்பத்தினர் தலையிலடித்து கொண்டு அழுதனர்.. பிரியாவின் சடலத்தை பார்த்த தோழிகளோ, "அய்யோ..! கண்ண தொறந்து பாருடி பிரியா.. எங்களை விட்டுட்டு போகாதே..டி என்று கதறினர்.. அதைவிட கொடுமை, இறுதிச்சடங்கின்போது, ஒரு மாணவி அங்கேயே மயங்கி விழுந்தார்.

ICU செக்ஷன்
ஐசியூ-ல் இருந்தபோதுகூட, தன்னை காண தோழிகள் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்கள் என்பது தெரிந்து, தன் அம்மாவிடம் பிரியா கடைசி நேரத்திலும் சொன்னாராம், அம்மா, அவங்களை எல்லாம் சாப்பிட வெச்சு அனுப்புமா, பசியா அனுப்பிடாதே என்று சொல்லி கொண்டே இருந்தாராம் பிரியா. இறுதி அஞ்சலியின்போது, பிரியாவின் சடலத்தின் மீது அவர் விளையாட்டில் இதுவரை வாங்கிய மெடல்களையும், விருதுகளையும் ஒவ்வொன்றாக எடுத்து அடுக்கி வைத்து, பெற்றோர்களும், உறவினர்களும் கதறி அழுதனர்.. இத்தனை கப் எதுக்குடா வாங்குனே? ஏன்டா நாங்க கூப்பிடறது காதில விழலயா? என்று அழுது கேட்டு கண்ணீர் வடித்தனர்.

ஜெர்ஸி
பிரியாவின் கல்லூரித் தோழிகள் பிரியாவுக்கு பிடித்த கால்பந்தை கொண்டுவந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி அழுத காட்சி காண்பவர்களின் இதயத்தை பிழிந்து கண்ணீர் வர வைப்பதாக இருந்தது... மாணவி பிரியாவின் உடல் ஷெனாய் நகர் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவருடைய இறுதி ஊர்வலத்தின்போது, அவருடைய கால்பந்து ஷூக்களும், விருப்பப்பட்டு வாங்கிய ஜெர்சியும் வைத்து கொண்டு வரப்பட்டது. மாணவி பிரியாவின் இறுதிச் சடங்கில் உறவினர்கள், நண்பர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

லாஸ்ட் டான்ஸ்
அடக்கம் செய்து மண்ணை போட்டு மூடிவிட்ட பிறகும், பிரியா, வந்துருடா என்று பெற்றோர்களும், உறவினர்களும் அழுது கூப்பிட்டு கொண்டே இருந்தனர். இந்நிலையில், பிரியாவின் கடைசி வீடியோ ஒன்றினை அவரது நண்பர்கள் ஷேர் செய்து வருகிறார்கள்.. ஃபுட்பால் பயிற்சிக்கு நடுவில், தன்னுடைய தோழியுடன் பிரியா டான்ஸ் ஆடுகிறார்.. மகிழ்ச்சியாகவும், உற்சாகத்துடனும், தோழியை இறுகப்பிடித்து கொண்டு, பிரியா வளைந்து நெளிந்து துடிப்புடன் சிரித்தபடியே டான்ஸ் ஆடுகிறார்.. இதுதான் பிரியாவின் கடைசி வீடியோவாம்.. கடைசி டான்ஸும் இதுதானாம்..

கடைசி ஆசை
அதேபோல, பிரியா ஆபரேஷனுக்கு முந்தைய நாள், தன்னுடைய அண்ணனுடன் போனில் பேசியிருக்கிறார்.. அண்ணா எனக்கு ஒன்னுமே ஆகல.. நீ ஏன் பயப்படறே? என்று கேட்டுள்ளார்.. உன் பொறந்த நாளைக்கு என்ன வேண்டும் என்று அண்ணன் கேட்டதற்கு, பூட்ஸ் மட்டும் வாங்கிக் குடு என்றாராம்.. இதுதான் கடைசியாக ஆசைப்பட்டு பிரியா கேட்டது என்கிறார்கள்.. பிரியா எப்போதுமே ஆக்டிவ்வாக இருப்பாராம்.. பிரியா அழுது நாங்கள் பார்த்ததே இல்லை, எப்பவுமே சிரிச்சிக்கிட்டே இருப்பாள் என்று பிரியாவின் தோழிகள் சொல்கிறார்கள்.. அந்தவகையில், இந்த வீடியோவிலும், துள்ளி குதித்து ஆடும் பிரியா சிரித்து கொண்டே இருக்கிறார்..!!
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications