பிரியமானவள்னு பேரை வச்சுட்டு... பொம்பளை கையில துப்பாக்கியை குடுத்திட்டீங்களேய்யா....!
சென்னை: சன் டிவியின் பிரியமானவள் சீரியல் சனி கிழமையோடு முடிந்தது (அப்பாடடான்னு ரொம்ப குடும்பங்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுதாம்). இன்று முதல் அந்த நேரத்தில் அருந்ததி சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது.
ஒரு குடும்பம் சந்தோஷமாக இருக்க என்னென்ன தேவையோ அது அனைத்தும் பிரியமானவள் சீரியலில் இல்லை. உமா- கிருஷணன் தம்பதியின் குடும்ப சந்தோஷத்தை விரோதம், குரோதம், வன்மம், கொலை, கடத்தல் என்று கதையை கொண்டு சென்றார்கள்.
தர்மாதான் மனைவியையும், அவளின் தங்கையையும் கொன்றான் என்று நம்ப வைக்க போதிய ஆதாரம் இல்லை திலீபனுக்கு. குற்றவாளி கூண்டில் நிற்கிறான் திலீபன்.

வீடியோ ஆதாரம்
ஆதாரமான வீடியோ கிடைக்கவில்லை. எனவே, திலீபன்தான் குற்றவாளி என்று தீர்ப்பு எழுதிய நேரத்தில் வீடியோ ஆதாரத்தை மானம்கெட்ட மாப்பிள்ளையின் பொண்டாட்டி கொண்டு வந்து தருகிறாள்.

கிடைத்தது வீடியோ
தர்மா தனது வாயால் நான்தான் மனைவியையும் அவளின் தங்கையையும் கொன்றேன்..அதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று குடி போதையில் பேசும் வீடியோ கிடைத்து விடுகிறது.

பேசறான் தர்மா
தர்மாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டும் தீர்ப்பு வழங்கி ஜெயிலுக்கு போக தயாரான போதும், உமா குடும்பத்தை பார்த்து வீர வசனம் பேசறான் தர்மா.

அறிவு வராது
சில ஜென்மங்களுக்கு தண்டனை கொடுத்தாலும் அறிவு வராது என்று உமா சொல்கிறாள். தனது இரண்டு மகள்களையும் கொன்றான் மாப்பிள்ளை என்று தெரிந்த மாமியார், ஆமாம் உமா நீ சொல்றது சரிதான்.. இந்த மாதிரி ஜென்மங்களை அப்படியே விட்டுட கூடாதுன்னு சொல்றாங்க.

இரண்டு தோட்டாக்கள்
பார்க்கறாங்க. .பக்கத்தில் இன்ஸ்பெக்டர் போன் பேசிக்கொண்டு இருக்கார். அவரது துப்பாக்கியை எடுத்து தர்மான்னு கூப்பிடறாங்க. அவன் திரும்ப இரண்டு தோட்டாக்கள் அவன் மீது பாய்கிறது. உமா... இனியாவது உன் குடும்பத்தோட மகிழ்ச்சியை நீ நினைச்ச மாதிரி வாழுன்னு சொல்றாங்க.

அசால்ட்டா
இவ்ளோ அசால்ட்டா இன்ஸ்பெக்டர் இருப்பாங்களா... இவ்வளவு வன்முறையை திணித்த சீரியலில் கடைசியில் பொம்பளை கையாலேயே அந்த வன்முறையை முடிச்சு வைத்தது சீரியலின் பெயருக்கு பொருத்தமாக இல்லை.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications