Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரியங்காவின் ஆவேச டான்ஸ்.. அத்தனை கூட்டத்திலும் ரோபோ சங்கரை நடனமாடி வழியனுப்பிய மனைவி! கலங்கிய ஜனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரையை சேர்ந்த சங்கர் மேடை நிகழ்ச்சிகளில் ரோபோ வேடமிட்டு டான்ஸ் ஆடுவதில் பிரபலம் ஆனார். இதன்காரணமாகவே ரோபோ சங்கர் என அழைக்கப்பட்டார். இதற்கு பிறகுதான் டிவிக்களில் தலைகாட்ட துவங்கி, தனக்கென ரசிகர்களை சம்பாதித்துக் கொண்டார். சென்னை வளசரவாக்கத்தில் ரோபோ சங்கரின் இறுதிச்சடங்கில் அவரது மனைவி பிரியங்கா, ஆவேசத்துடன் நடனமாடியது காண்போரை உலுக்கி எடுத்துவிட்டது.

பிரபல நடிகரும், மிமிக்ரி ஸ்டேண்ட் அப் காமெடி கலைஞருமான ரோபோ சங்கர் நேற்று இரவு உயிரிழந்தார்.. அவருக்கு 46 வயது என்று மீடியாக்களில் செய்தி வெளியானதுமே பலருக்கும் அதிர்ச்சியை தந்தது.

Priyanaka Robo Shankar

மருத்துவமனை அறிக்கை

கடுமையான இரைப்பை குடல் இரத்தப்போக்கு மற்றும் சிக்கலான வயிற்றுப் பிரச்சனை காரணமாக ஏற்பட்ட பல உறுப்பு செயலிழப்பு" காரணமாக ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அவரது உடல்நிலை மோசமடைந்து செப்டம்பர் 18 அன்று இரவு 9:05 மணிக்கு காலமானார், என்று மருத்துவமனை தரப்பில் அறிக்கையாக கூறப்பட்டிருந்தது.

ரோபோ சங்கரின் மரண செய்தியை கேள்விப்பட்டதுமே, முதல்வர் ஸ்டாலின் இரங்கல் அறிக்கை வெளியிட்டார்.. வளசரவாக்கத்தில் உள்ள ரோபோ சங்கரின் வீட்டிலேயே, அவரது உடல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது.. துணை முதல்வர் நேரடியாகவே சென்று ரோபோவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

அப்பா - அப்பா மகள் கண்ணீர்

தனுஷ், சிவகார்த்திகேயன், விஜயகாந்தின் மகன்கள் என ஒட்டுமொத்த திரையுலகமும் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.. மேலும், ரோபோ சங்கர் உடனான தங்களது நினைவுகளை டைரக்டர் வெற்றிமாறன், நடிகர் வையாபுரி, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் கண்ணீருடன் பகிர்ந்தனர்..

சென்னை வளசரவாக்கம் பிருந்தாவன் நகரில் உள்ள மின்மயானத்தில் மாலை 4.30 மணிக்கு இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.. இதையடுத்து, ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம் வளசரவாக்கத்தில் அவரது வீட்டிலிருந்து 3 மணிக்கு மேல் புறப்பட்டது.

மகள் இந்திரஜா தந்தையின் இறுதி ஊர்வலத்தில் சொம்பில் நீருடன் நடந்து சென்றதை பார்த்து பொதுமக்களும் கலங்கினார்கள்.. அதேபோல, அப்பாவின் இறுதி ஊர்வலத்தின்போது, ரோபோ சங்கரின் உடலை பார்த்து, அப்பா அப்பா என இந்திரஜா கதறி அழுதுகொண்டேயிருந்தார்..

மனைவி மீது ரோபோ சங்கர் காதல்

அதேபோல, ரோபோ சங்கர் மனைவி பிரியங்கா நடனமாடியது ஒட்டுமொத்த பேரையும் கண்கலங்க செய்தது.. 2002 ஆம் ஆண்டு நடன கலைஞரான பிரியங்காவை ரோபோ சங்கர் காதலித்து திருமணம் செய்துகொண்டார். அன்றிலிருந்து எப்போதுமே தனது மனைவியை எந்த இடத்திலும் ரோபோ சங்கர் விட்டுக் கொடுத்ததில்லை.

அதேபோல, ரோபோ சங்கரின் இந்த மாபெரும் வெற்றிக்கு பின்னால், அவருக்கு துணையாக நின்றது பிரியங்காதான்.. தான் ஒரு டான்சராக இருந்தாலும், தன்னுடைய கணவரின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்கை வகித்து வந்தார்.. திருமணமாகி 22 வருட காலமாகியும், இவர்களது அந்நியோன்யமும், பரஸ்பர அன்பும், மரியாதையும் எப்போதுமே குறைந்ததில்லை..

டான்ஸ் ஆடிய பிரியங்கா

ஒருமுறை காதலர் தினத்தன்று, "ஆயிரம் சண்டைகள் உன்னோடு நான் போட்டாலும்... நீ இல்லாமல் என் வாழ்க்கை இல்லை என்பதே உண்மை. இறக்கும் வரை காதலர்களாகவே இருப்போம் நாம்" என்று பதிவிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

நடனம்தான் தங்கள் இருவரையும் வாழ்க்கை பாதையில் இணைத்து வைத்தது என்று பலமுறை பிரியங்கா சொல்லி வந்துள்ளார்.. இப்போது இறுதி ஊர்வலத்திலும், ஆவேசத்துடன் நடனமாடினார் பிரியங்கா.. நெற்றி நிறைய விபூதியுடன், மனம்நிறைய துக்கம், இழப்புடன் பிரியங்கா நடனமாடி, தன்னுடைய கணவரை இறுதி ஊர்வலத்தில் வழியனுப்பி வைத்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+