வாட்ஸ் அப் வீடியோ மூலம் ஓட்டு கேட்ட வழக்கு.. ஐகோர்ட் அதிரடி.. திமுக எம்.எல்.ஏவுக்கு சிக்கல்!
சென்னை : புதுச்சேரி திமுக எம்எல்ஏவுக்கு எதிரான தேர்தல் வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. இதனால், தேர்தல் பிரச்சார நேரம் முடிந்த பிறகு வாட்ஸ் அப் வீடியோ வாயிலாக பிரச்சாரம் மேற்கொண்டதால் திமுக எம்.எல்.ஏ நாக தியாகராஜனின் வெற்றியை எதிர்த்து பாஜக வேட்பாளர் தொடர்ந்த வழக்கு விசாரணை நடைபெறவுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில், நிரவி - திருப்பட்டினம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட என்.நாக தியாகராஜன் 5,511 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்த பாஜக வேட்பாளர் மனோகரன், திமுக எம்எல்ஏ நாக தியாகராஜனின் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவரது மனுவில், வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் வாட்ஸ் அப் வீடியோ மூலம் வாக்காளர்களின் அனுதாபத்தை பெறும் வகையில் தேர்தல் பரப்புரை செய்தது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது, எனவே அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
வாட்ஸ் அப் மூலம் வீடியோ அனுப்பியது பொதுக் கூட்டம் நடத்தி பிரச்சாரம் செய்வதாகாது. மொபைலில் பிரச்சாரம் செய்ய மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் தடை ஏதும் விதிக்கப்படவில்லை. எனவே தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி திமுக எம்எல்ஏ நாக தியாகராஜன் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு சென்னை ஐகோர்ட் நீதிபதி கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வாட்ஸ் அப் மூலம் பிரச்சாரம் செய்தது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவுகளை மீறிய செயலா இல்லையா? என்பது குறித்து விசாரணைக்குப் பிறகே தீர்மானிக்க முடியும் எனக் கூறி, தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி திமுக எம்எல்ஏ நாக தியாகராஜன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனால், திமுக எம்.எல்.ஏ வெற்றியை எதிர்த்த வழக்கு விசாரணை நடைபெறவுள்ளது.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications