வளர்த்துவிட்ட விஜயகாந்த்! நன்றி கெட்ட நடிகர் விஜய்! பொறிந்து தள்ளிய தயாரிப்பாளர் ஏஎம் சவுத்ரி
சென்னை: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். இந்நிலையில் தான் விஜயகாந்தை குறிப்பிட்டு நடிகர் விஜய் நன்றி கெட்ட மனிதர் என திரைப்பட தயாரிப்பாளர் ஏஎம் சவுத்ரி கடுமையாக விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார்.
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இன்று தனது 71 வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையடுத்து சென்னையில் தேமுதிக அலுவலகத்தில் இன்று நடிகர் விஜயகாந்த் தொண்டர்களை நேரில் சந்தித்தார். அப்போது இரு கைகளையும் கூப்பி வணக்கம் கூறினார்.

பிறகு தொண்டர்களுக்கு விருந்து வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் விஜயகாந்த் பிறந்தநாள் வறுமை ஒழிப்பு தினமாக கடைப்பிடித்து வருகின்றனர். அதற்கு ஏற்ப விஜயகாந்த் தொண்டர்களுக்கு ஆண்டுதோறும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
நடிகர் விஜயகாந்துக்கு அரசியல்வாதிகளும், திரைப்பிரபலங்களும் இன்று வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் தான் விஜயகாந்த் பிறந்தநாளில் திரைப்பட தயாரிப்பாளர் ஏஎம் சவுத்ரி வீடியோ வெளியா வெளியிட்டு நடிகர் விஜயை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‛‛வணக்கம், நான் திரைப்பட தயாரிப்பாளர் ஏஎம் சவுத்ரி தேவர் பேசுகிறேன். திரையுலகில் நன்றி என்ற அர்த்தத்துக்கு மிகமிக பொருத்தமானவர் கேப்டன் விஜயகாந்த். மிகமிக விசுவாசமான மனிதர். சினிமாவை நேசித்தவர். சினிமா மூலம் நிறைய மனிதர்களுக்கு நல்லது செய்தவர். அவருக்கு இன்று பிறந்தநாள். விஜயகாந்த்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

ஒரு நன்றிகெட்ட மனிதரை அடையாளம் காட்ட நான் இந்த வீடியோவில் பேசுகிறேன். நடிகர் விஜய் ஒரு 10, 15 நாட்களுக்கு முன்பு தொல் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினார். அது சமூக வலைதளங்கள் உள்பட அனைத்து நியூஸ்களிலும் வந்தது. ஆனால் நான் இப்போது வரை தேடிப்பார்த்தேன். விஜய், இதுவரை விஜயகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கவே இல்லை. இது மிகப்பெரிய துரோகம்.
விஜயகாந்த் இல்லை என்றால் நடிகர் விஜய் இல்லை. நடிகர் விஜயின் கையை பிடித்து செந்தூர் பாண்டி படத்தில் விஜயகாந்த் கூட்டி வந்து தனது தம்பி என அறிமுகம் செய்யாவிட்டால் ‛தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா' என ரோட்டில் ஆடிக்கிட்டே தான் இருக்க வேண்டும். ஏனென்றால் விஜயகாந்த் இல்லாவிட்டால் அப்படிப்பட்ட கேரக்டர்கள் தான் விஜய்க்கு கிடைத்திருக்கும்.
ஆனால் இன்று ஒரு மனிதராக விஜயை மாற்றி கொண்டு வந்தவர் விஜயகாந்த். இதுதவிர விஜயின் தந்தை எஸ்ஏ சந்திரசேகருக்கு நிறைய படங்கள் பண்ணியதால் தான் அவரே இயக்குனராக வர முடிந்தது. இப்படி விஜய் குடும்பத்தையே வாழ வைத்ததவர் தான் விஜயகாந்த். இன்று அவரது பிறந்தநாள். ஆனால் விஜய் ஒரு வாழ்த்து கூட கூறவில்லை.
விஜயகாந்த் பொதுவான மனிதர். அவரை வாழ வைத்த மனிதர். இத்தகைய சூழலில் நடிகர் விஜய் வாழ்த்து கூறாமல் இருப்பது என்பது அவர் தவறான பாதையில் செல்வதாக சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நன்றிகெட்ட மனிதர்கள் ஜெயிக்க முடியாது. அவர்கள் தோற்றுப்போவார்கள். நான் சொல்கிற விஷயம் என்னவெ்ன்றால் நன்றி கெட்ட செயலால் நடிகர் விஜய் அரசியலில் ஜெயிக்கவே முடியாது. அவர் சினிமாவில் கோடிக்கணக்கில் சம்பாதித்து இருக்கலாம். ஆனால் அரசியலில் ஜெயிக்க முடியாது'' என காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.
-
மத்திய அரசுடன் இணக்கமான உறவு வச்சுக்கலாம்.. விஜய் எடுத்த புதிய ரூட்! காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க -
பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. நீலாங்கரை இல்லத்தில் திரண்ட திரையுலகினர் -
திமுகவிற்கு சோதனை மேல் சோதனை.. சுற்றி நிற்கும் பருந்துகள்! தப்பவே முடியாது போலயே.. ஸ்டாலினுக்கு செக் -
தொகுதி தோறும் 2 கேமராமேன், ஒரு எடிட்டர்! தவெக எம்எல்ஏ-க்களுக்கு கட்சி தலைமை போட்ட 'இன்ஸ்டா' உத்தரவு! -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
இனி யாருக்காக அரசியல் செய்யணும்.. கலக்கத்தில் சீமான்.. லைம்லைட்டை இழந்து நிற்கும் நாம் தமிழர்? -
ஸ்மார்ட் மீட்டர், பரந்தூர், ECR பாலம்! முக்கிய திட்டங்களை முடக்கிய விஜய்! தமிழ்நாட்டிற்கு பேராபத்து -
சிங்கப்பெண் அதிரடி படைக்கு ரூ.354 கோடி ஒதுக்கீடு.. 2500 புதிய பணியிடங்கள் உருவாகிறது! முதல்வர் விஜய் -
விஜய், சுந்தர் சியின் முடிவு.. சூழ்ச்சி இருக்கு! சொல்லுறதை நம்ப முடியல! ரகசியங்களை உடைத்த நடிகர் இளவரசு -
பாஜக கோபத்திற்கு ஆளாக நேரிடும்! இந்தியா கூட்டத்திற்கு தவெக போகாதது ஏன்? விஜய் எடுத்த பயங்கர முடிவு? -
இந்தியா கூட்டணியில் மிஸ்ஸான விஜய் கட்சி.. காங்கிரஸ் ஒன்னு சொல்ல.. திருமா வேற சொல்ல..! பெரிய குழப்பம் -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications