ஞானவேல் ராஜாவின் பாஜக ஆதரவு.. மோடிக்கு புகழ் மழை! இந்தி எதிர்ப்பு கட்சிகள் மீது அட்டாக்! FLASH BACK
சென்னை: அமீருக்கு எதிராக பேசி கடும் எதிர்ப்புகளை சந்தித்து வரும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, 2019 ஆம் ஆண்டு இந்தி திணிப்பை ஆதரித்தும், பிரதமர் மோடியை பாராட்டியும் அரசியல் பேசிய செய்தி தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
பருத்தி வீரன் திரைப்படம் தொடர்பாக இயக்குநர் அமீர், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இடையேயான மோதல் பெரும் விவாதப் பொருளாகி இருக்கிறது. கார்த்தி 25 பட விழாவுக்கு அமீர் வராதது தொடர்பாக யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர், இந்த படத்தால் தனக்கு 2 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை குற்றம் சுமத்தினார். இதற்கு பதிலளித்து பேட்டியளித்த ஞானவேல் ராஜா, அமீரை திருடன் என்றும், சினிமா எடுக்கத் தெரியாது என்றும் தரக்குறைவான விமர்சனங்களை முன்வைத்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஞானவேல் ராஜாவின் இந்த கருத்துக்கு இயக்குநர்கள் பாரதிராஜா, சசிக்குமார், சமுத்திரக்கனி, கரு பழனியப்பன், நடிகர் பொன்வண்ணன், பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்ததுடன் அமீருக்கு ஆதரவாக கருத்திட்டு இருந்தனர். நாளுக்கு நாள் ஞானவேல் ராஜாவுக்கு எதிர்ப்பு வலுத்து வந்த நிலையில், சிவக்குமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் மீதும் பலர் விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கினர். இந்த நிலையில்தான் இன்று ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டார்.
அதில், "'பருத்தி வீரன்' பிரச்சினை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இது நாள் வரை அதை பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே 'அமீர் அண்ணா' என்றுதான் நான் அவரை குறிப்பிடுவேன். ஆரம்பத்திலிருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப்பழகியவன். அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தின. அதற்கு பதில் அளிக்கும்போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான்." என்று குறிப்பிட்டு இருந்தார்.
இப்படி சர்ச்சைக்குள் சிக்கி இருக்கும் ஞானவேல் ராஜா, ஒரு நிகழ்வில் பிரதமர் மோடியையும், இந்தி மொழி கற்பதை ஆதரித்தும் பேசிய செய்தியும், புகைப்படங்களும் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர பிறந்தநாள் விழா கொண்டாட்ட குறும்பட போட்டியின் பரிசளிப்பு விழா கோவையில் நடைபெற்றது. பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் பங்கேற்ற இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

அப்போது அவர் பேசுகையில், "மத்திய அரசு இந்தியை திணிக்கவில்லை. மற்றொரு மொழியை தெரிந்துகொள்வதில் எந்த தவறும் இல்லை. தமிழ்நாட்டில் இதை அரசியலாக்குகிறார்கள். பொதுவான மொழி என ஒன்று இருப்பது அவசியம். ஒரு மொழியால் மற்றொரு மொழி அழியும் என ஒரு கும்பலால் தவறான பிரச்சாரம் இங்கு பரப்பப்படுகிறது. 90 சதவித தமிழர்களுக்கு இந்தி தெரியாததாலேயே மத்திய அரசின் திட்டங்களை மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. மொழியும் இதற்கு ஒரு காரணம்.
நான் பிரதமர் மோடியின் பேச்சை மொழிமாற்றம் செய்ய விரும்புகிறேன். அதற்கான உரிமம் வாங்கவும் நினைக்கிறேன். பள்ளிகளில் இந்தி இருப்பது நல்லது. இங்கு இருக்கும் குழந்தைகளை போன்று மூத்த அரசியல்வாதிகளும் புரிந்து கொண்டால் நல்லது. இந்தியை அனைவரும் கற்றுக்கொண்டால் மோடி பேசுவது புரிந்து நாமும் மாறிவிடுவோமோ என்ற பதட்டமும், பயமும் இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது." என்றார்.
-
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications