எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.. குழந்தைக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.. ஆர்.கே.சுரேஷ் உருக்கம்
சென்னை: எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் என புதிதாக பிறந்த குழந்தையின் உடல்நிலை குறித்து தயாரிப்பாளரும் பாஜக பிரமுகருமான ஆர்.கே.சுரேஷ் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
விஜய் ஆண்டனியின் சலீம், விஜய் சேதுபதியின் தர்மதுரை போன்ற பல படங்களைத் தயாரித்தவர் ஆர்.கே.சுரேஷ். தொடர்ச்சியாக தமிழ் படங்களை விநியோகித்து வருகிறார்.
இதனிடையே இயக்குநர் பாலாவின் தாரதப்பட்டை படத்தில் வில்லனாக இயக்குநர் ஆர்.கே.சுரேஷ் நடித்திருந்தார். அது போல் மருது உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

ஹீரோவாக நடித்த பில்லாபாண்டி
இதைத் தொடர்ந்து அவர் ஹீரோவாக நடித்த பில்லா பாண்டி, விசித்திரன் போன்ற படங்கள் பெரிய வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து விருமன் படத்திலும் இவர் வில்லனாகவே நடித்திருந்தார். மேலும் அதர்வாவின் பட்டத்து அரசன் போன்ற படங்களிலும் ஆர்.கே. சுரேஷ் வில்லனாகவே நடித்திருந்தார்.

சினிமா பைனான்சியர்
இவர் சினிமா பைனான்சியர் மது என்பவரை கடந்த ஆண்டு 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்ரேயா என்ற பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் இரண்டாவதாக மது கர்ப்பம் தரித்தார். இந்த நிலையில் மதுவிற்கு கடந்த டிசம்பர் மாதம் வளைகாப்பு நடந்தது. இந்த நிலையில் ஆர்.கே சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவை போட்டிருந்தார்.

ஆண் குழந்தை
அதில் எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு மூச்சுத் திணறல் பிரச்சினை இருந்தது. கடவுளின் அருளால் தற்போது நன்றாக இருக்கிறான். எங்களுக்காக கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள் என குறிப்பிட்டிருந்தார். அவர் பாஜகவிலும் உறுப்பினராக இருந்து வருகிறார்.

ஆறுதல்
இவர் உருக்கமான தகவலை தெரிவித்துள்ள நிலையில் ரசிகர்களும் பாஜக தொண்டர்களும் அவருக்கு ஆறுதல்களை தெரிவித்துவருகிறார்கள். மேலும் தாங்கள் குழந்தைக்காக பிரார்த்தனை செய்வதாகவும் எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்றும் ஆர்.கே.சுரேஷுக்கு மெசேஜ் அனுப்பி வருகிறார்கள். இன்னும் சிலர் நாங்கள் சிறப்பு பிரார்த்தனை செய்கிறோம் என்றும் மெசேஜ் அனுப்புகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications