“தயாரிப்பாளர்கள் கூப்பிடத்தான் செய்வார்கள்.. ஏன் வர்றீங்க..?” தயாரிப்பாளர் அருவருக்கத்தக்க பேச்சு!
சென்னை: பெண்கள் குறித்து சிறுபட முதலீட்டு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஆர்.கே.அன்புசெல்வன் அருவருக்கத்தக்க வகையில் பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. "தயாரிப்பாளர்கள் கூப்பிடத்தான் செய்வார்கள், நானும்தான் கூப்பிடுவேன், அழைத்தால் ஏன் வருகிறார்கள்?.. வேறு தொழிலை பார்த்துக் கொள்ளலாமே?" என சினிமா தயாரிப்பாளர்கள் மீதான பாலியல் புகார் தொடர்பான கேள்விக்கு ஆர்.கே.அன்புசெல்வன் பதில் அளித்துள்ளார்.
பெப்சி யூனியனை கண்டிக்கும் வகையில் இன்று சென்னை நெசப்பாக்கம் பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார் சிறுபட முதலீட்டு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஆர்.கே.அன்புசெல்வன். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, சினிமா தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார்கள் முன்வைக்கப்பட்டு வருவது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அன்புசெல்வன், "தயாரிப்பாளர்கள் கூப்பிடத்தான் செய்வார்கள், நானும்தான் கூப்பிடுவேன்.. அழைத்தால் ஏன் வருகிறார்கள்?.. உனக்கு வேறு தொழில் இருந்தால் ஒதுங்கிப் போ.. வேறு தொழிலை பார்த்துக் கொள்ளலாமே? இது தான் தொழில் என்றால் நாங்கள் என்ன செய்ய முடியும்? ஏன் கூப்பிட்ட என நான் சொல்ல முடியுமா?" என அருவருக்கத்தக்க வகையில் பேசியுள்ளார்.
சிறுபட முதலீட்டு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஆர்.கே.அன்புசெல்வன் அருவருக்கத்தக்க வகையில் பேசி உள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications