தாயுள்ளத்தோடு பரிசீலித்த முதல்வர்.. உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி.. நெகிழும் தயாரிப்பாளர் கூட்டுக்குழு
சென்னை: சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினுக்கு, ஒருங்கிணைந்த தயாரிப்பாளர்கள் கூட்டுக்குழு நன்றி தெரிவித்துள்ளது.
தாயுள்ளத்தோடு, தங்கள் கோரிக்கையை பரிசீலனை செய்ததாக முதல்வர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரையுலகத்திலிருந்து அரசியலுக்கு வந்தவர் உதயநிதி ஸ்டாலின். எனவே தற்போதைய திரையுலக பிரச்சினைகளை உதயநிதி ஸ்டாலினிடம் கொண்டு சென்று சேர்த்து தீர்வு பெறுவது வாடிக்கையாக மாறியுள்ளது.

நன்றி தெரிவிப்பு
இப்படித்தான், கோவை நகரில் மூடியுள்ள திரையரங்குகளை திறக்க வேண்டும் என்பதும் கோரிக்கையாக இருந்தது. இந்த நிலையில்தான், ஒருங்கிணைந்த தயாரிப்பாளர் கூட்டுக் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

கலந்தாய்வு கூட்டம்
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் நலன் கருதி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கமும் இணைந்த "ஒருங்கிணைந்த தயாரிப்பாளர்கள் கூட்டுக்குழு" கடந்த 17.09.2021 கலந்தாய்வு கூட்டம் நடத்தியது. அதில், பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

கோவை தியேட்டர்கள்
குறிப்பாக, தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் பாதிக்கபடாத வண்ணம், கோயம்புத்தூர் மாநகரில் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடி இருக்கும் திரையரங்குகள் திறக்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களிடத்தில் ஒருங்கிணைந்த தயாரிப்பாளர்கள் கூட்டுக்குழு சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தாயுள்ளத்தோடு பரிசீலனை
எங்களது கோரிக்கையை கனிவுடன் ஏற்று, தாயுள்ளத்தோடு பரிசீலனை செய்து தற்போது கோயம்புத்தூர் மாநகரில் உள்ள கட்டுபாடுகளை நீக்கி ஞாயிற்றுக்கிழமைகளில் திரையரங்குகளை திறந்துகொள்ளலாம் என்ற அரசாணை வெளியிட்டிருப்பது தமிழ்த் திரையுலகினருக்கு ஏற்படுத்தியுள்ளது.

உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி
அரசாணை பெரும் மகிழ்ச்சியை வெளியிட்ட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினரும், சேப்பாக்கம்-திருவல்லிகேணி சட்டமன்ற உறுப்பினருமான திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், அரசாணை வெளியிட உறுதுணையாக இருந்த தமிழக அரசு அதிகாரிகளுக்கும், தமிழ்த் திரையுலகினரின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு ஒருங்கிணைந்த தயாரிப்பாளர்கள் கூட்டுக்குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்ததால், தியேட்டர்களை திறக்க அனுமதிக்கப்பட்டது. ஆனால் கோவைக்கு மட்டும், கூடுதல் கெடுபிடி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
‘வாட்ச்' கொடுத்த திமுக.. அண்ணா அறிவாலய மகளிரணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றோருக்கு ‘ஜாக்பாட்' -
துரைமுருகன் திரும்பி சென்றது ஏன்.. மகளிரணி கூட்டத்தில் என்ன நடந்தது.. திமுக ஐடி விங் விளக்கம் -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே.. தவெக ஆட்சியை விமர்சித்து ஜவாஹிருல்லா பேச்சு -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு? -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி!












Click it and Unblock the Notifications