பாவம் சூர்யா; பாமக மிரட்டுகிறது; சூப்பர் ஸ்டாரும் உலக நாயகனும் எங்கே? தல-தளபதி எங்கே?
சென்னை: ஜெய்பீம் திரைப்பட விவகாரத்தில் நடிகர் சூர்யாவுக்கு மிரட்டல்கள் அதிகரித்து வரும் சூழலில், நடிகர் சங்கமும் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும் என்ன செய்கின்றன என பேராசிரியர் அருணன் வினவியுள்ளார்.
மேலும், இன்று சூர்யாவுக்கு ஏற்பட்ட இதே நிலை நாளை அஜித்துக்கும், விஜய்க்கும், ஏன் ரஜினி, கமலுக்கு கூட ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், தமிழ் திரையுலகம் நடிகர் சூர்யாவை தனிமரமாக விட்டது நியாயமல்ல என்பதை தனது ட்விட்டர் பதிவில் சூசகமாக தெரிவித்திருக்கிறார் பேராசிரியர் அருணன்.
நடிகர் சூர்யாவை அடித்தால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு தருவதாக மயிலாடுதுறை பாமக மாவட்டச் செயலாளர் சித்தமல்லி பழனிசாமி அறிவித்திருப்பதையும் அருணன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அருணன் பதிவு
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பிரமுகரும், பேராசிரியருமான அருணன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''நடிகரும் தயாரிப்பாளருமான சூர்யாவை அடித்தால் ஒரு லட்சம் கொடுப்போம் என்று ஒரு கோஷ்டி அறிவிக்கிறது. ஓடிய அவரது படத்தை தடுத்து நிறுத்துகிறது. நடிகர் சங்கமும் தயாரிப்பாளர்கள் சங்கமும் என்ன செய்கின்றன?''

எங்கே போனார்கள்?
''சூப்பர் ஸ்டார்கள், உலக நாயகன்கள், தலைகள், தளபதிகள் எங்கே ? இன்று சூர்யாவுக்கு நாளை உங்களுக்கு''. இவ்வாறு பேராசிரியர் அருணன் தனது ஆதங்கத்தை இந்தப் பதிவின் மூலம் கொட்டித்தீர்த்திருக்கிறார். இதனிடையே தமிழகத்தில் ஒரு திரைப்படத்திற்கு சிக்கல் எழுகிற போது அதை அந்தப் படத்தின் பிரச்சனையை அதில் நடித்த உரிய நடிகர் மட்டுமே தீர்க்க வேண்டிய ஒரு சூழல் தமிழகத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இப்படித்தான் பாபா விவகாரத்தில் ரஜினியும், விஸ்வரூபம் விவகாரத்தில் கமலும், தலைவா படத்திற்கு விஜயும் பல சவால்களை தன்னிச்சையாக எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

தயாரிப்பாளர்கள்
நடிகர் சூர்யா வெறுமனே நடிகர் மட்டுமல்ல அவர் ஒரு தயாரிப்பாளரும் கூட. இதனால் தயாரிப்பாளர்கள் சங்கமாவது இதில் தலையிட்டு நிலைமையை சுமூகமாக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரமுகரும், பேராசிரியருமான அருணன் எதிர்பார்க்கிறார். இதனிடையே ஓடிடி மூலம் ஜெய்பீம் இதுவரை பல கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிலவரம் என்ன
இதனிடையே ஜெய்பீம் திரைப்பட விவகாரத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட எந்த நடிகர்கள் தலையிட்டாலும் அது நிலைமையை மேலும் சூடாக்குமே தவிர சுமூகமாக்காது என்பது கவனிக்கத்தக்கது. விரைவில் நடிகர் சூர்யா தரப்பிலிருந்து விளக்க அறிக்கை ஒன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications