தமிழக கட்சிகள் மறந்துபோன மதுவிலக்கு கொள்கை... அரசியல்வாதிகள் வாய் திறக்க மறுப்பது ஏன்?
சென்னை: தமிழகத்தில் காலம்காலமாக கட்சிகளால் பேசும் பொருளாக இருந்தது மதுவிலக்கு. எம்.ஜி.ஆர்., அண்ணா முதல் தற்போது இருக்கும் அரசியல்வாதிகள் வரை மதுவிலக்கு பற்றி அனைவரும் பேசினார்கள்.
இந்த தேர்தலில் குடும்ப தலைவிகள் மீது அதிக கரிசனத்துடன் இருக்கும் திமுக, அதிமுக கட்சிகள் மதுவிலக்கு குறித்து வாய் திறக்கவில்லை.
தமிழக அரசுக்கு எந்தவித குறையும் இல்லாமல் வருமானத்தை குவித்து வருவது டாஸ்மாக் கடைகள்தான். இந்த வருமானத்தை வைத்து பல்வேறு இலவச திட்டங்களை தீட்ட தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் கட்சிகள் தீர்மானித்துள்ளன.

மதுவிலக்கு பேச்சு
ஒவ்வொரு தேர்தலின்போதும் மக்களின் மனதில் இடம் பிடிக்க அரசியல் கட்சிகள் ஒரு குறிப்பிட்ட திட்டத்தை முன்னெடுத்து செல்வார்கள். அந்த திட்டத்தை மட்டுமே அதிகம் போகஸ் செய்து மக்களின் வாக்குகளை அறுவடை செய்வார்கள். அப்படி தமிழகத்தில் காலம்காலமாக கட்சிகளால் பேசும் பொருளாக இருந்தது மதுவிலக்கு. எம்.ஜி.ஆர்., அண்ணா முதல் தற்போது இருக்கும் அரசியல்வாதிகள் வரை மதுவிலக்கு பற்றி அனைவரும் பேசினார்கள்.

போராட்டம் வலுப்பெற்றன
ஒவ்வொரு தேர்தல் வருவதற்கு முன்பும் மதுவிலக்கு குறித்த பேச்சு அடிபடும். அதன்பின்பு அந்த பேச்சு அப்படியே மாயமாக சென்று விடும். குறிப்பாக கடந்த சட்டமன்ற தேர்தலை மிகவும் குறிப்பிட்டு சொல்லலாம். 2015-ல் மதுவிலக்கு கொண்டுவரப்படாததைக் கண்டித்து காந்தியவாதியான சசிபெருமாள் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி நடத்திய போராட்டத்தில் உயிரிழந்தார். இந்த மரணத்துக்கு பிறகு மதுபானக் கடைகளை அடைக்கக்கோரி தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்கள், கடையடைப்புப் போராட்டம், டாஸ்மாக் மதுக்கடைகள் மீதான தாக்குதல் என போராட்டங்கள் வலுப்பெற்றன.

2016 தேர்தலில் மதுதான் முக்கிய அம்சம்
இதன்பின்பு 2016 தேர்தலில் மது விலக்கு குறித்த பேச்சுக்கள் தமிழகம் முழுவதும் கவனம் பெற்றன. அரசியல்வாதிகள் பேட்டிகளில் கண்டிப்பாக மதுவிலக்கு குறித்த பேச்சு இருக்கும். மீடியாக்களும் மது தொடர்பான செய்திகளுக்கு முக்கியத்துவம் காட்டின. திமுக, பாமக, மக்கள் நல கூட்டணி ஆகிய கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையில் ''நாங்கள் வெற்றி பெற்றால் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டு வருவோம்'' என்று அறிவித்தன. ஆளும் கட்சியான அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் முழுமையான மதுவிலக்கு உடனடியாக சாத்தியமானது இல்லை; மதுவிலக்கு படிப்படியாகக் கொண்டுவரப்படும் என்று அறிவித்தது.

ஜெயலலிதா எடுத்த அதிரடி முடிவு
அதன்பின்பு அதிமுக வெற்றி பெற்றது. 500 மதுக்கடைகளை மூடுவதற்கான அரசாணையிலும், மதுக்கடைகளை காலை 10 மணிக்குப் பதில் நண்பகல் 12 மணிக்கு திறப்பதற்கான அரசாணையிலும் கையெழுத்திட்டார் முதல்வர் ஜெயலலிதா. அதன்பின்னர் மதுவிலக்கு என்ற சொல்லே மக்களிடம் படிப்படியாக மறைந்தது. அரசியல்வாதிகள் அது குறித்து பேசவேயில்லை. இதன்பின்பு கடந்த வருடம் கொரோனா வந்தது பெரும்பாலான நாட்கள் மதுக்கடைகள் மூடப்பட்டு கிடந்தன. அதன்பிறகு கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு வழக்கம்போல் அரசு கஜானாவை நிரப்பி கொண்டிருக்கிறது.

இந்த தேர்தலில் வாய் திறக்கவில்லை
தற்போது தேர்தல் வாக்குறுதியை அரசியல் கட்சிகள் வெளியிட்டு வருகின்றன. ஆனால் இந்த முறை மதுவிலக்கு என்ற பேச்சையே அரசியல்வாதிகள் சுத்தமாக மறந்து விட்டனர். பொதுவாக மதுவிலக்கு கொள்கை குறிதது அதிகம் பேசும் பாமக தேர்தல் அறிக்கையில் கூட மதுவிலக்கு குறித்து அதிகம் பேசவில்லை. குடும்ப தலைவிகள் மீது அதிக கரிசனத்துடன் இருக்கும் திமுக, அதிமுக கட்சிகள் மதுவிலக்கு குறித்து வாய் திறக்கவில்லை. இந்த கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் இது இடம்பெறுமா? என்பதும் கேள்விக்குறிதான். இதுபோல் மற்ற கட்சிகளும் மதுவிலக்கு தொடர்பாக பெரிதாய் ஏதும் பேசவில்லை.

மக்களும் அமைதி
தமிழக அரசுக்கு எந்தவித குறையும் இல்லாமல் வருமானத்தை குவித்து வருவது டாஸ்மாக் கடைகள்தான். இந்த வருமானத்தை வைத்து பல்வேறு இலவச திட்டங்களை திட்ட தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் கட்சிகள் தீர்மானித்துள்ளன. இதனால் வருவாயை அளித்தரும் டாஸ்மாக்கை இழக்க கட்சிகள் தயாராக இல்லை. டாஸ்மாக் மூடினால் கள்ளச்சாராயம் அதிகரித்து விடும் என்ற சமாளிப்பு பதிலை அரசியல்வாதிகள் ரெடியாக வைத்துள்ளனர். பள்ளிக்கு அருகில் டாஸ்மாக் இருந்தாலும் தற்போது மக்கள் ஏதும் சொல்லாமல் கடந்து சென்று விடுவதால் அரசியல் கட்சிகளுக்கு வாய்ப்பாகி விட்டது.
-
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications