பேராசிரியர் அன்பழகன் மறைந்து 3 ஆண்டுகள்! மறையாத வரலாற்றுத் திட்டங்கள்! கல்வித்துறையில் செய்தது என்ன?
சென்னை: பேராசிரியர் அன்பழகன் கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று செயல்பட்ட காலங்களில் அவர் செயல்படுத்திய பல திட்டங்கள் இன்றும் நினைவுகூரத்தக்கவை.
அரசுப் பள்ளிகளில் கணினிப் பாடம் தொடங்கப்பட்டது முதல் உயர்கல்வியில் தமிழைப் பயிற்று மொழியாக்குவது வரை அவர் முன்னெடுத்து செயல்படுத்திய திட்டங்கள் ஏராளம்.
பேராசிரியர் அன்பழகனின் 3ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று, அவர் அமைச்சராக இருந்த காலங்களில் அவர் ஆற்றிய பணிகள் வருமாறு;

கல்விச் செலவு
1990-91 கல்வியாண்டில் பொறியியல் கல்லூரியில் சேரும் கிராமப்புற மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வில் ஐந்து மதிப்பெண்கள் வழங்கும் நடைமுறையை கொண்டு வந்தவர் பேராசிரியர் அன்பழகன். இதேபோல் 1996 - 2000 காலகட்டத்தில் 965 தொடக்கப் பள்ளிகளை புதிதாகத் தொடங்கியதோடு, பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகளில் மாநில, மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களது உயர் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டவர்.

கம்ப்யூட்டர் சயின்ஸ்
தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழக இளைஞர்கள் பலர் இன்று உலகம் முழுவதும் கொடிக்கட்டி பறக்கிறார்கள் என்றால் அதற்கு அடித்தளமிட்டவர் பேராசிரியர் அன்பழகன். அவர் கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் தான் 666 பள்ளிகளில் 11, 12 ஆம் வகுப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் முதல்முறையாக தொடங்கப்பட்டது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள் வழங்கப்பட்டன.

உயர்கல்வித்துறை
1997 ஆம் ஆண்டில் தான் உயர்கல்வித்துறை தனியாக உருவாக்கப்பட்டது. 1997-98ல் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைகளில் ஒற்றைச் சாளர முறை அறிமுகப்படுத்தப்பட்டது அன்பழகன் அமைச்சராக இருந்த போது தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் திருநெல்வேலியில் சட்டக் கல்லூரி தொடங்கப்பட்டதும் திருச்சியில் கி.ஆ.பெ. விசுவநாதம் பெயரில் மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டதும் அன்பழகன் கல்வி அமைச்சராக பொறுப்பு வகித்த காலத்தில் தான் என்பது கவனிக்கத்தக்கது.

பெரியார் பல்கலைக் கழகம்
இதேபோல் சேலத்தில் பெரியார் பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டது. உயர்கல்வியில் தமிழைப் பயிற்றுமொழியாக்குவது குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டது. இவையெல்லாம் பேராசிரியர் க.அன்பழகன் தமிழக அரசின் கல்வித் துறை அமைச்சராக இருந்த காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications