விஜிலா வந்த ஒரே வாரத்தில்.. ஸ்டிரைட்டாக "அவரையே" சந்திக்க போகும் கனிமொழி.. தெற்கில் தொடங்கும் கேம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவின் முக்கியமான தென் மண்டல் நிர்வாகி ஒருவர் திமுக பக்கம் எப்போது வேண்டுமானாலும் "ஜம்ப்" ஆகலாம் என்று கட்சி வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள். விஜிலா சத்யானந்த் திமுக வந்த நிலையில் இன்னொரு தலையும் திமுகவிற்கு தாவ ரெடி என்று கூறப்படுகிறது.

அதிமுகவில் முக்கியமான தென்மாவட்ட நிர்வாகிகளில் ஒருவராக இருந்தவர் விஜிலா சத்யானந்த். அதிமுக ராஜ்ய சபா எம்பியாக இருந்த இவர் ஒரு காலத்தில் ஜெயலலிதாவின் மனம் கவர்ந்த தென் மாவட்ட தலைவர்களில் ஒருவராக பார்க்கப்பட்டவர்.

முக்கியமாக கட்சி மீட்டிங்குகள் நடந்தால் விஜிலாவிடம் தனியாக பேசுவது, தென் மாவட்ட அரசியல் நிலவரம் குறித்து கேட்பது என்று ஜெயலலிதா இவரிடம் நன்றாக பழகி இருக்கிறார். ஆனால் ஜெ மரணத்திற்கு பின் கட்சியில் விஜிலாவிற்கு பெரிய அளவில் மதிப்பு இல்லை.

விஜிலா

விஜிலா

ஜெயலலிதா மறைவிற்கு பின் ஏற்பட்ட உட்கட்சி பூசல், நிர்வாகிகளுக்கு இடையிலான மோதல் என்று பல்வேறு காரணங்களால் கட்சிக்குள் விஜிலா பெரிதாக கவனம் பெறவில்லை. முக்கிய நிர்வாகியாக இருந்தும் கூட இவருக்கு சரியாக மதிப்பு அளிக்கப்படாத நிலையில் தற்போது அவர் அதிமுகவில் இருந்து விலக்கிவிட்டு திமுகவில் இணைந்துவிட்டார். திமுகவில் ஒரு வாரத்திற்கு முன் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் விஜிலா இணைந்தார்.

சர்ப்ரைஸ்

சர்ப்ரைஸ்

வரிசையாக கொங்கு மண்டல நிர்வாகிகளைத்தான் திமுக தட்டி தூக்கிக்கொண்டு இருந்தது. ஆனால் திடீரென தெற்கில் இருந்து விஜிலாவை கட்சிக்குள் கொண்டு வந்து அதிமுகவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். ஊரக உள்ளாட்சி தேர்தல், நகராட்சி, மாநகராட்சி தேர்தல் என்று அடுத்தடுத்து பல்வேறு தேர்தல்கள் நடக்க உள்ளதால் தமிழ்நாடு முழுக்க மாற்று கட்சிகளில் உள்ள முக்கிய தலைகளை திமுக தங்கள் பக்கம் இழுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே விஜிலா திமுகவிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.

நிர்வாகிகள்

நிர்வாகிகள்

இந்த நிலையில்தான் விஜிலா மூலமாக விரைவில் முக்கியமான தென் மாவட்ட அதிமுக புள்ளி, முன்னாள் நிர்வாகி ஒருவர் திமுகவிற்குள் வர இருப்பதாக தகவல்கள் வருகின்றன. கொங்கில் எப்படி கரூர் நிர்வாகிகள் பலர் திமுக பக்கம் சென்றார்களோ அதேபோல் நெல்லையிலும், தூத்துக்குடியிலும் முக்கிய அதிமுக நிர்வாகிகள் திமுக பக்கம் தாவ போகிறார்கள் என்று கூறப்படுகிறது.

கனிமொழி

கனிமொழி

கரூரில் எப்படி செந்தில்பாலாஜி இதற்கான பணிகளை செய்து வருகிறாரோ அதேபோல் கனிமொழி தென் மண்டல ஆபரேஷனில் இறங்கிவிட்டார் என்கிறார்கள் திமுக நிர்வாகிகள். தென் மண்டலத்தில் ஏற்கனவே கனிமொழி முக்கிய அதிமுக நிர்வாகி ஒருவரிடம் பேசி வருகிறார். அவர் விரைவில் திமுகவிற்கு வந்துவிடுவார். கனிமொழியே இவரை நேரில் சந்தித்து பேச போகிறார் என்று நிர்வாகிகள் தரப்பு நம்மிடம் தெரிவித்துள்ளது.

ஏன்

ஏன்

அந்த அதிமுக நிர்வாகி தென் மண்டலத்தில் முக்கியமான ஜாதி ஒன்றை சேர்ந்தவர் என்றும், அதிமுகவின் வன்னியர் இடைஒதுக்கீடு முடிவு காரணமாகவே தென் மண்டலத்தில் எங்களுக்கு வாக்கு வரவில்லை என்றும் கோபத்தில் இருப்பதாக நிர்வாகிகள் கூறுகிறார்கள். இதன் காரணமாகவே அதிமுகவில் இருந்து திமுகவிற்கு இவர் தாவ போவதாக கூறப்படுகிறது.

ஒரு வாரம்

ஒரு வாரம்

விஜிலா திமுகவிற்கு வந்த அடுத்த வாரமே இதற்கான முன்னெடுப்புகள் தொடங்கப்பட்டுவிட்டன. விரைவில் கனிமொழி அந்த நிர்வாகியை சந்திப்பார். அதன்பின் ஸ்டாலினை சந்தித்து கட்சியில் சேர போகிறார் என்றும் கூறப்படுகிறது. அதிமுக கொங்கில் நடக்கும் அரசியல் மாற்றத்தை கவனிக்கும் போது திமுக தெற்கில் சர்ப்ரைஸ் கொடுக்க போவதாக நிர்வாகிகள் பேசிக்கொள்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+