Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முக்கிய புள்ளிகள் பாஜகவில் சேரும் நிகழ்ச்சி ரத்து ஆகலயாம்.. எல் முருகன் கொடுத்த விளக்கத்தை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவில் இன்று முக்கிய புள்ளிகள் இணைய போகிறார்கள் என்று பில்டப் மேல் பில்டப் கொடுத்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்ட பாஜக.. கடைசியில் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டதாக கூறியது பாஜகவினருக்கே ஏமாற்றத்தை கொடுப்பது போல ஆகிவிட்டது. இதற்கு விளக்கம் அளித்த மத்திய இணை அமைச்சர் எல் முருகன் 'மோடியின் வருகையால் பிற கட்சியினர் பாஜகவில் இணைவது தள்ளிப்போயிருக்கிறது' என்றார்.

பாஜக சார்பில் என் மண், என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மோடி பங்கேற்க இருக்கும் பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்க இருப்பதாக பாஜகவினர் கூறி வருகிறார்கள். மேலும் பாஜகவில் பிற கட்சிகளை சேர்ந்தவ பல முக்கிய பிரமுகர்கள் இணைய இருப்பதாகவும் பாஜகவினர் கூறினர்.

prominent-persons-from-other-parties-joining-bjp-is-postponed-union-minister-l-murugan-explains

கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருப்பதாகவும் பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பத்திரிகையாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதனால் செய்தியாளர்களும் பாஜகவினர் கூறிய இடத்திற்கு சென்று காத்திருந்தனர். ஆனால், நேரம் ஆனதே தவிர யாருமே வரவில்லை. சில மணி நேரம் கழித்து பாஜக தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, மத்திய இணையமைச்சர் எல். முருகன், பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் , பாஜக துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்டோர் வந்தனர்.

எல் முருகன் விளக்கம்: அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாஜக துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் 'கோவையில் மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கால அவகாசம், பாதுகாப்பு தேவைப்பட்டதால், அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது" என்று பேட்டி அளித்தார். இதன் பிறகு பேசிய மத்திய இணை அமைச்சர் எல் முருகன், "பிரதமர் மோடி தமிழகம் வருகை தர இருக்கிறார்.

பிரதமர் மோடியின் இரண்டு நாள் பயணம் தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். பாஜக ஆட்சியில் 11 லட்சம் கோடி ரூபாய் திட்டங்கள் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழுக்கு பெருமை சேர்த்துவிட்டு மோடி வரவிருக்கிறார். பிரதமர் மோடிகை வருகை தரும் செய்தி மக்கள் மத்தியில் சேர வேண்டும். எனவே, பிற கட்சியினர் பாஜகவில் இணைவது தள்ளிப்போயிருக்கிறது.

அனைத்து கட்சியில் இருந்தும் பாஜகவிற்கு வர உள்ளார்கள்: ஏனென்றால் பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகளில் சில நடைமுறைகள் இருப்பதால் தள்ளிப்போயிருக்கிறது. இதை விளக்கமாகவே சொல்லியிருக்கிறோம். தமிழ்நாடு வேகமாக வளர்வதற்கு காரணம் பிரதமர் மோடி காட்டும் தனிப்பட்ட அக்கறையே ஆகும். திமுக, அதிமுக என்று இல்லை.. அனைத்து கட்சியில் இருந்தும் பாஜகவிற்கு வர உள்ளார்கள்" என்றார்.

பாஜகவில் முக்கிய புள்ளிகள் இணைய போகிறார்கள் என்று பில்டப் மேல் பில்டப் கொடுத்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்ட பாஜக.. கடைசியில் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டதாக கூறியது பாஜகவினருக்கே ஏமாற்றத்தை கொடுப்பது போல ஆகிவிட்டது. பாஜகவில் இணைய போகும் முக்கிய புள்ளிகள் யார் என்று பார்க்க காத்திருந்த நெட்டிசன்களும் தற்போது ஏகத்திற்கும் பாஜக குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+