நிலம், வீடு, சொத்து உள்ளதா? பத்திரப்பதிவு செய்யணுமா? முத்திரைத் தாளுக்கு பதில் இ ஸ்டாம்ப் வருதா? செம
சென்னை: தமிழகத்தில் சொத்து மதிப்புகள் அளவுக்கு அதிகமாக எகிறி வரும் நிலையில், அதற்கேற்ப முத்திரை தீர்வை, பதிவு கட்டணமாக செலுத்தும் தொகையின் மதிப்பும் அதிகரித்துள்ளது... எனவேதான், அதிக தொகைக்கு முத்திரை தாள் வாங்குவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்றன. இந்த சிக்கலை தீர்ப்பதற்காகவே புதிய நடவடிக்கையை தமிழக அரசு கையில் எடுத்துள்ளது. அது என்ன?
தமிழகத்தில் பதிவு துறையின் கீழ், 575 பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படுகின்றன. பதிவுத்துறை அலுவலகத்தில் சொத்து கிரயம் செய்வதற்கு 5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் ஆகிய மதிப்புள்ள முத்திரைத்தாள் பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் (ஸ்டாம்ப் வெண்டர்) மூலம் முத்திரைத்தாள் விற்கப்படுகிறது.

பத்திரப்பதிவு முறைகளின் போது ஏற்படும் சிக்கல்களை தவிர்க்கவே, இ-ஸ்டாம்பிங் என்ற மின்னணு முத்திரைதாள் கட்டணத்தை செலுத்தும் முறையும் அமலில் உள்ளது..
சட்ட ஆவணங்கள், சொத்து பரிவர்த்தனைகள்
அதாவது இ-ஸ்டாம்ப் என்பது, முத்திரைத் தாள்களுக்குப் பதிலாக, முத்திரைச் சான்றிதழ்களை (e-stamping) ஆன்லைனில் செலுத்திப் பெறுவதாகும்.. இது முத்திரையிடும் செயல்முறையை டிஜிட்டலாக்கி, பாதுகாப்பானதாகவும், வசதியாகவும் மாற்றுகிறது. முத்திரைச் சான்றிதழ் பெறுவதற்கு, ஆன்லைனில் விண்ணப்பித்து, கட்டணத்தை செலுத்தி, சான்றிதழைப் பெறலாம். சட்ட ஆவணங்கள், சொத்து பரிவர்த்தனைகள் போன்றவற்றுக்கும் முத்திரை சான்றிதழ் தேவைப்படும்போது, இந்த ஆன்லைன் முறையைப் பயன்படுத்தலாம்.
இந்நிலையில் முத்திரைத்தீர்வு குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.. அதன்படி, பத்திரப்பதிவில் முத்திரை தாள்களுக்கு பதிலாக, இ - ஸ்டாம்ப் வசதியை, சார் பதிவாளர் அலுவலகங்களில் வழங்குவது குறித்து, அதிகாரிகள் பரிசீலித்து வருகிறார்களாம்..
முத்திரைத்தாள், பத்திரங்கள்
அதாவது, சொத்து விற்பனை பத்திரத்தில் குறிப்பிடும் மதிப்புக்கு ஏற்ப, முத்திரை தீர்வை, பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். எனவே, மதிப்புக்கு முத்திரை தாள் வாங்கி, அதில் பத்திரங்கள் தற்போது எழுதப்பட்டு வருகின்றன.. இதற்கு பதிலாக டிஜிட்டல் முறையிலேயே இ ஸ்டாம்பிங் சேவை துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த புதிய முறைப்படி, முத்திரை தீர்வை, பதிவு கட்டணம் போன்ற தொகைக்கு முத்திரை தாள் வாங்காமல், அதை குறிப்பிட்ட கணக்கில் செலுத்தி, இஸ்டாம்பிங் சான்றிதழை பெறலாம். இதை பத்திரத்துடன் இணைத்து, பத்திரப்பதிவுக்கு தாக்கல் செய்தால் போதும் என்கிறார்கள். இந்த புதிய நடைமுறை விரைவில் அமலாகும் என்றும் தெரிகிறது.
முத்திரை தீர்வை விலக்கு தேவை
சமீபத்தில், தமிழக நிதித்துறை பட்ஜெட்டில், பெண்கள் பெயரில் சொத்துக்களை வாங்கினால் ஒரு சதவிகிதம் முத்திரைத் தீர்வை குறைவு என சலுகை வழங்கி, சட்டசபையில் அறிவித்து வெளியிட்டிருந்தது மக்களின் கவனத்தை திருப்பியிருந்தது.
எனினும், புதுச்சேரியில் நடைமுறையில் உள்ளதுபோல, தமிழகத்தில் நிரந்தரமாக வசிக்கும் பெண்கள் பெயரில் சொத்துக்களை வாங்கினால் முத்திரைத் தீர்வையில் 50% விலக்கு அளிக்க வேண்டும்" என்று அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ஹென்றி புதிய கோரிக்கை விடுத்திருந்ததும் இங்கு நினைவுகூரத்தக்கது.












Click it and Unblock the Notifications