Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பட்டா ஆவணங்களில் எழுத்து பிழை? சொத்து பத்திரத்தில் வித்தியாசமா? இனிஷியல் சேஞ்ச் பண்ணணுமா? சிம்பிள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சொத்துக்களை பாடுபட்டு வாங்கும்போது, அதுகுறித்த லீகல் ஒபீனியன் கையில் வைத்திருப்பது அவசியமான ஒன்று.. இந்த அறிக்கையில் பிழைகள் இருந்தால் என்ன செய்ய வேண்டும்? ஆவண எழுத்தர் வாயிலாக புதிய கிரைய பத்திரம் தயாரிக்கப்படும்போது ஏற்படும் சிக்கல்கள் என்னென்ன? தவறுகளை திருத்தம் செய்வது எப்படி? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்ப்போம்.

நிலம், வீடு உள்ளிட்ட சொத்து பத்திரங்களை வாங்குவோர், பெரும்பாலும் வழக்கறிஞர்களிடம் ஒப்படைத்து அவைகளை சரிபார்ப்பார்கள்.. இதையடுத்து, அந்த சொத்து தொடர்பான பத்திரங்களின் உண்மை தன்மை என்ன? அதில் வில்லங்கம் எதுவும் உள்ளதா? எனபதை என்பதை வழக்கறிஞர்களும் ஆய்வு செய்து அறிக்கையாக தருவார்கள்.

patta Property Deed

லீகல் ஒபீனியன்

இதை போன்று வழக்கறிஞரின் "லீகல் ஒபீனியன்" எனப்படும் அறிக்கை இருந்தால், அதை மட்டுமே போதும் என்று பலரும் சொத்துக்களை வாங்கிவிடுகிறார்கள்.. ஆனால், பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட விஷயங்களில் எழுத்துப்பிழை உள்ளதா, அல்லது ஏற்கனவே எழுத்துப்பிழை திருத்தப்பட்டதா? என்பதை பலரும் கவனிக்காமல் விட்டுவிடுகிறார்கள்.

முக்கியமாக, ஆவண எழுத்தர் வாயிலாக புதிய கிரைய பத்திரம் தயாரிக்கப்படும்போது, அந்த சொத்து குறித்து பழைய பத்திரத்தில் உள்ள விபரங்கள் அடிப்படையில்தான் கிரைய பத்திரம் எழுதப்படும்.. அப்படி இருக்கும்போது, பழைய பத்திரத்தில் பிழை இல்லாமல் இருக்க வேண்டும்.

சிறிய பிழை - பெரிய சிக்கல்

எனென்றால், சொத்தின் சர்வே எண், பரப்பளவு, விற்பவரின் முகவரி போன்ற தகவல்களில் தட்டச்சு செய்யும்போது, பிழைகள் ஏற்படலாம்... சிறு பிழையே என்றாலும், சில வருடங்கள் கழித்து, மிகப்பெரிய சிக்கலை தந்துவிடலாம். இந்த சிறிய பிழைய திருத்த வேண்டுமானாலும், அதற்கென நாட்களையும், நேரத்தையும் செலவு செய்ய வேண்டியிருக்கும்.

அதிலும், மனைக்கான அரசு வழிகாட்டி மதிப்பை தவறாக குறிப்பிட்டு, இந்த பிழை சில வருடங்கள் கழித்து தெரிய வந்தால் மிகப்பெரிய சிக்கல் வரலாம்.. காரணம், இந்த நீண்ட இடைவெளியில் அரசு வழிகாட்டி மதிப்பு மாறியிருக்கும்...

அந்தப் பிழையைத் திருத்த முயலும்போது, வித்தியாச தொகைக்கு முத்திரை தீர்வைக் கட்டணம், பதிவுக் கட்டணம் போன்றவற்றை செலுத்த சொல்லக்கூடும்... கூடுதல் முத்திரை கட்டணத்தை செலுத்தாமல் இருக்க மேலதிகாரிகள் வரை முறையீடு செய்ய வேண்டியிருக்கும்..

பத்திரம் - கவனக்குறைவு

எனவேதான், சொத்து வாங்கும்போது அதற்கான பத்திரத்தை முறையாக பதிவு செய்வதில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். வரைவு பத்திரத்தையும், பதிவான பத்திரத்தையும் 2, 3 முறை படிக்க வேண்டும்.

குறிப்பாக, தெரு பெயர், விற்பவரின் தந்தை பெயர், முகவரி தொடர்பான விஷயங்களில் சிறு பிழைகள் ஏற்படலாம்.. இந்த பிழைகளை கண்டுபிடித்ததுமே உடனே திருத்திக்கொள்ள வேண்டும்.

பிழை திருத்தல் பத்திரம்

இதற்கு சார் - பதிவாளரை அணுகி விண்ணப்பிக்க வேண்டும். 'பிழை திருத்தல் பத்திரம்' (Rectification Deed) அதாவது, வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் விற்பனை பத்திரங்கள் மற்றும் தலைப்பு பத்திரங்கள் போன்ற ஆவணங்களிலுள்ள பிழைகளை சரி செய்யக்கூடிய வழிவகைதான் திருத்த பத்திரம்.. இதற்கு உறுதிப்படுத்தல் பத்திரம், துணை பத்திரம் என வேறு பெயர்கள் உண்டு.

பத்திரப்பதிவு அலுவலகத்தில், 'பிழை திருத்தல் பத்திரம்' (Rectification Deed) வாங்கி, அந்த பிழையை அவரை சரிசெய்ய சொல்ல வேண்டும். விற்பனை செய்து, ஆவணம் ஏற்படுத்தி தந்த நபரால் மட்டுமே, அந்த பிழையை திருத்த முடியும்.. இதற்கு வாங்கி சரிசெய்ய செய்ய வேண்டும்.

இனிஷியல் திருத்தம்

கவனக் குறைவால் ஏற்படும் பிழைகளைத் திருத்தி பதிவு செய்யும்போது அதற்காகக் கட்டணங்கள் வசூலிக்கமாட்டார்கள்... அதேபோல, பத்திரத்தில் இனிஷியல் மட்டுமே திருத்த வேண்டுமானாலும், அதை எளிதாக திருத்தலாம். இதற்கு இனிஷியலையும் பத்திரத்தில் சரியாக குறிப்பிட வேண்டும்..

மேலும், ஆதார் கார்டு, பான் கார்டு, மார்க் ஷீட், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களில், உங்கள் சரியான இனிஷியல் உள்ள அனைத்தையும் சார்பதிவாளர் காட்டி, இதில் எதை வேண்டுமானாலும் ஆவணத்தோடு இணைத்துக்கொள்ள சொல்லிவிடலாம். உடனே சார் பதிவாளரும், நீங்கள் எழுதும் இனிஷியலுடன், சொத்து ஆவணத்தை பதிவு செய்து தந்துவிடுவார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+