Property: உங்கள் சொத்து பத்திரத்தில் இந்த 5 வகையான பிழைகள் இருந்தால் திருத்தலாம்! அவை என்னென்ன?
சென்னை: சொத்து பத்திரங்கள் எந்த வகையான பிழைகள் இருந்தால் அதை திருத்தம் செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் ஆவண பிழை திருத்தம் என்றால் என்ன என்பதையும் பார்க்கலாம்.
இதுகுறித்து இன்றைய தகவல் எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: உங்கள் ஆவண பிழை திருத்தம் செய்வது எப்படி? (Rectification of Document)

ஆவண பிழை திருத்தம் என்றால் என்ன?
ஒரு பத்திரத்தில் (விற்பனை பத்திரம், பரிசு பத்திரம், பங்குப்பிரிவு பத்திரம் முதலியவை)
அளவு (extent / measurement), சர்வே எண், வாங்கியவர் / விற்றவர் பெயர் spelling,
எல்லை விவரம், முகவரி
போன்ற விபரங்கள் தவறாக பதிவு செய்யப்பட்டால், அதனை சட்டப்படி திருத்திக்கொள்ள ஒரு புதிய பத்திரம் பதிவு செய்ய வேண்டும்.
இதையே Rectification Deed (ஆவண பிழை திருத்த பத்திரம்) என்பார்கள்.
யார் செய்ய வேண்டும்?
முதலில் பத்திரத்தில் விற்றவர் + வாங்கியவர் (அல்லது இருவரின் வாரிசுகள்) ஆகிய இருவரும் ஒப்புக்கொண்டு Rectification Deed பதிவு செய்ய வேண்டும்.
ஒரே பக்கம் மட்டும் செய்து விட முடியாது.
பதிவு செய்யும் முறை
1. Stamp Paper (சில நேரங்களில் ரூ.100 / ரூ.200 non-judicial stamp paper போதும், பிழையின் தன்மைக்கு ஏற்ப Registration fees விதிக்கப்படும்).
2. "Rectification Deed" draft தயாரிக்க வேண்டும் (Advocate / Document Writer எழுதிக்கொடுப்பார்).
3. Original பத்திர விவரம் + திருத்த வேண்டிய பிழை + சரியான திருத்தம் என்று எழுத வேண்டும்.
4. இருவரும் (vendor & purchaser) கையொப்பம் போட்டு, சாட்சி கையொப்பங்களுடன் Sub-Registrar அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.
5. புதிய பத்திர எண் (Doc No) கிடைக்கும்.
எத்தகைய பிழைகள் Rectification மூலம் சரி செய்யப்படும்?
1. பெயர் spelling பிழை
2. Survey number தவறாக இருப்பது
3. Extent/measurement தவறு
4. எல்லை (North/South/East/West boundary) தவறு
5. முகவரி பிழை
முக்கிய குறிப்புகள்
Rectification Deed பதிவு செய்யாமல் பழைய பத்திரத்தில் கைமுறையாக திருத்தம் செய்திருந்தால், அது செல்லாது.
பத்திரத்தை பதிவு செய்த Sub-Registrar மட்டுமே margin-ல் "correction note" எழுதிக் கையொப்பம் போட முடியும். ஆனால் அது பதிவு நாளிலேயே மட்டுமே நடக்கும்.
அந்த மாற்றம் பதிவு அலுவலர் முன்னிலையில் margin correction note ஆக இல்லாவிட்டால், அது செல்லாது.
பிறகு திருத்த வேண்டுமெனில் Rectification Deed தவிர வேறு வழியில்லை.
அதனால், நீங்கள் Certified Copy எடுத்து பார்த்து, அளவு தவறு இருந்தால் → வாங்கியவர்/விற்றவர் (அல்லது அவர்களின் வாரிசுகள்) இணைந்து Rectification Deed மூலம் சரி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications