சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?
சென்னை: தமிழகத்தில் நிலம் அல்லது வீடு வாங்கத் திட்டமிட்டுள்ளவர்கள் மற்றும் தங்களது சொத்துக்களை விற்கக் காத்திருப்பவர்கள், இந்த மார்ச் மாத இறுதியில் ஒரு மிகப்பெரிய இக்கட்டான சூழலைச் சந்திக்க வாய்ப்புள்ளது.. காரணம், வரும் ஏப்ரல் 1, 2026 முதல் பத்திரப்பதிவுத் துறையில் மாநில அரசு சில அதிரடி மாற்றங்களை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த மாற்றங்கள் குறித்த விழிப்புணர்வு இல்லாதவர்கள், கடைசி நேரத்தில் பெரும் நிதி இழப்பை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்படுகிறது.
நிலத்தின் வழிகாட்டி மதிப்பு (Guideline Value) மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றில் நம்முடைய தமிழக அரசு சில முக்கிய திருத்தங்களைக் கொண்டு வரப்போகிறதாம்..

சொத்து வைத்திருப்போர் அலர்ட்
கடந்த சில ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருந்த சில பகுதிகளின் வழிகாட்டி மதிப்பை, தற்போதைய சந்தை விலைக்கு நிகராக உயர்த்த அரசு ஆலோசித்து வருகிறது. இதன் காரணமாக, ஏப்ரல் 1ம் தேதிக்குப் பிறகு சொத்து பரிமாற்றம் செய்பவர்கள், தங்களது பட்ஜெட்டில் லட்சக்கணக்கில் கூடுதல் சுமையை ஏற்க வேண்டியிருக்கும்.
முக்கியமாக, இந்த மார்ச் 31-க்குள் பத்திரப்பதிவு முடிப்பவர்களுக்கு மட்டுமே பழைய கட்டணம் பொருந்தும். ஏப்ரல் 1-க்குப் பிறகு பதிவு செய்பவர்கள், உயர்த்தப்பட்ட புதிய மதிப்பின் அடிப்படையில் கூடுதல் முத்திரைத் தீர்வை செலுத்த வேண்டியிருக்கும். இது ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தின் வாழ்நாள் சேமிப்பில் பெரிய இழப்பை ஏற்படுத்தக்கூடும். அதனால் ஏற்கனவே டோக்கன் முன்பதிவு செய்திருப்பவர்கள் மீதமுள்ள இந்த 5 நாட்களில் பணிகளை முடிப்பதே புத்திசாலித்தனம்.
ஆட்டோமேட்டிக் பட்டா மாறுதல்
அதேபோல ஏப்ரல் மாதம் முதல் பட்டா மாறுதல் தொடர்பான ஆன்லைன் நடைமுறைகள் மேலும் எளிமையாக்கப்பட உள்ளன. நிலத்தை பதிவு செய்த உடனேயே தானியங்கி முறையில் பட்டா மாற்றத்திற்கு விண்ணப்பிக்கும் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது.
இருந்தாலும் இதில் ஒரு முக்கியமான சிக்கல் உள்ளது. பழைய வில்லங்க சான்றிதழில் ஏதாவது குளறுபடிகள் இருந்தால், இந்த தானியங்கி முறை அவர்களுக்கு கை கொடுக்காது. அதனால் உங்கள் நிலத்தின் விவரங்கள் கம்ப்யூட்டரில் சரியாக பதிவேற்றப்பட்டுள்ளதா என்பதை இந்த ஒரு வாரத்திற்குள் சரிபார்த்துக் கொள்வது நல்லது.. இதனால் வருங்கால சட்ட சிக்கல்களை தவிர்க்க உதவும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
அங்கீகாரம் இல்லாத மனைகளுக்கு செக்?
அதேபோல, டிடிசிபி (DTCP) அல்லது சிஎம்டிஏ (CMDA) அங்கீகாரம் இல்லாத மனைகள் மற்றும் வரன்முறைப்படுத்தப்படாத இடங்களை விற்பனை செய்வதில் ஏப்ரல் முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் வரவுள்ளன.
அரசு வழங்கிய சலுகை காலங்கள் முடிவடைய உள்ள நிலையில், இனி முறையான அனுமதி இல்லாத இடங்களைப் பதிவு செய்வதில் சார் பதிவாளர் அலுவலகங்களில் கடுமையான கெடுபிடிகள் இருக்கும். சொத்து வாங்குபவர்கள் வெறும் குறைந்த விலைக்கு ஆசைப்படாமல், அந்த இடத்திற்கு முறையான அரசு அங்கீகாரம் இருக்கிறதா என்பதை ஏப்ரல் மாதத்திற்கு முன்பே உறுதி செய்து கொள்வது உங்கள் வாழ்நாள் சேமிப்பைப் பாதுகாக்கும்.
நில பத்திரப்பதிவு ரூல்ஸ்
ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்கள் மற்றும் புதிதாக வீடு கட்டத் திட்டமிடுபவர்கள், இந்த மார்ச் மாத இறுதி கெடுவை ஒரு எச்சரிக்கையாகக் கொள்ள வேண்டும். மார்ச் 31-க்குள் முடிக்கப்படும் ஒவ்வொரு பதிவும் உங்களுக்குக் கணிசமான தொகையை மிச்சப்படுத்தும். எனவே, தாமதிக்காமல் உங்கள் வழக்கறிஞர் அல்லது ஆவண எழுத்தரிடம் இப்போதே ஆலோசனை பெற்று, தேவையான ஆவணங்களைத் தயார் நிலையில் வைத்திருப்பது நல்லது.
எனவே சொத்து வாங்குபவர்கள் குறைந்த விலையில் கிடைக்கிறது என்று ஆசைப்படாமல், அந்த இடத்திற்கு முறையான அங்கீகாரம் இருக்கிறதா என்பதையெல்லாம் இந்த 5 நாட்களில் கரெக்ட்டாக பயன்படுத்துவதே பெஸ்ட் ஆப்ஷன்...!!
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications