பத்திரப்பதிவு பண்ண போறீங்களா.. மெசேஜ் வந்ததா? கிளம்பிருச்சு சிக்கல்.. தமிழக பதிவுத்துறையின் முடிவு?
சென்னை: பொதுமக்களின் நன்மைகளை கருத்தில் கொண்டு, தமிழக பத்திரப்பதிவு பல்வேறு முன்னெடுப்புகளை செய்துவரும்நிலையில், தற்போது இன்னொரு கோரிக்கையும் பதிவுத்துறைக்கு விடுக்கப்பட்டுள்ளது.
ஆவண எழுத்தர்கள், இடைத்தரகர்கள் ஆகியோர் சார்-பதிவாளர், பதிவாளர் அலுவலகங்களுக்குள் வரக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவிட்ட நிலையில், எல்லாமே இப்போது ஆன்லைன் வழியாகவே பதிவு செய்யப்படுகிறது.

பத்திரப்பதிவு: இடத்தை வாங்குபவரும், விற்பவரும் பணத்தை பத்திரப்பதிவு அலுவலத்திற்கு கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை. இதனால் நேரம் மிச்சமாகிறது.. பொதுமக்களுக்கும் வேலை எளிதாக முடிகிறது.
நாளுக்கு நாள், இப்படி பொதுமக்களின் நன்மைக்காகவே அனைத்து வசதிகளையும் தமிழக பத்திரப்பதிவு துறை செய்துவரும் நிலையில், மேலும் சில வசதிகளையும் கொண்டுவந்துள்ளது. அதன்படி, பொதுமக்கள் வரிசையில் காத்திருக்காமல் பத்திரப்பதிவு செய்வதற்கான, "தட்கல்" திட்டமும், கடந்த 2022 முதல் கொண்டுவரப்பட்டது..
சனிக்கிழமைகள்: அதேபோல, சில அலுவலகங்களில் எதிர்பார்த்த அளவுக்கு, சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு நடப்பதில்லை என்பதால், இதுகுறித்த புகாரையும் பதிவுத்துறை களைந்திருந்தது. எனினும் தற்போது மீண்டும் ஒரு புகார் கிளம்பி உள்ளது..
அதாவது, சொத்து விற்பனை உள்ளிட்ட பத்திரங்கள், அந்தந்த பகுதியில் உள்ள சார் - பதிவாளர் அலுவலகங்கள் வாயிலாக பதிவு செய்யப்படுகின்றன. அப்படி பதிவு செய்யப்படும் பத்திரங்களை, ஓரிரு நாட்களுக்குள்ளேயே உரியவர்களுக்கு அளிக்க வேண்டும்..
அதுமட்டுமல்ல, இப்படி பணி முடித்து திருப்பி தரப்பட்ட பத்திரங்களின் எண்ணிக்கையை, பதிவாளர்கள் கண்காணிக்கவும், கட்டிட கள ஆய்வு பணிகளுக்காக, பத்திரங்களை தாமதப்படுத்தக் கூடாது என்றும் பதிவுத்துறை தரப்பில் ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை மண்டலம்: இருந்தாலும், இந்த உத்தரவை பெரும்பாலான சார் - பதிவாளர்கள் மதிப்பதில்லையாம்.. குறிப்பாக, சென்னை, மதுரை, திருச்சி, கோவை மண்டலங்களில், பதிவு முடிந்து விட்டது, பத்திரத்தை நேரில் வந்து வாங்கி கொள்ளுங்கள் என்று வாட்ஸ்அப் மெசேஜ்கள் வருகின்றனவாம்.. இதை நம்பி சம்பந்தப்பட்டவர்கள், நேரில் சென்றால், கட்டிட கள ஆய்வு இன்னும் முடியவில்லை என்கிறார்களாம்.
எனவே, கள ஆய்வு முழுமையாக இருந்தால் மட்டுமே, தகவல் தர வேண்டும் என்றும், சார் - பதிவாளர்கள் வேண்டுமென்றே மக்களை அலைக்கழிக்கக்கூடாது, இது தொடர்பான நடவடிக்கையை பத்திரப்பதிவு துறை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கைகள் கிளம்பி உள்ளன.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications