பத்திரப்பதிவு நாளை.. முன்பதிவு டோக்கன் கிடைக்காமல் சென்னை மக்கள் தவிப்பு! அதிக வில்லையை அரசு ஒதுக்குமா
சென்னை: சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு சார்பதிவாளர் அலுவலகங்களில் நாளை கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு செய்ய உத்தரவிட வேண்டும் என்று பதிவுத்துறைக்கு, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.. இது தொடர்பாக வேண்டுகோள் ஒன்றையும் பெயிரா அவசரமாக விடுத்திருக்கிறது...!!
தமிழகத்தில் வீடு, மனை வாங்குபவர்கள், அதற்கான பத்திரங்களை பதிவு செய்வது வழக்கமாகும்.. குறிப்பாக, சுபமுகூர்த்த நாட்களில் பத்திரப்பதிவு செய்வதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

சுபமுகூர்த்த தினத்துக்காக பத்திரப்பதிவு கூட செய்யாமல் எத்தனையோ பேர் காத்திருக்க செய்கிறார்கள். பத்திரப்பதிவு அலுவலகங்களில் முகூர்த்த நாட்களில் மக்கள் பத்திரங்களை பதிவு செய்ய அலைமோதுகின்றனர். .. சில நேரங்களில் முகூர்த்த நாட்கள் வார விடுமுறை நாட்களில் வந்து விடுவதால் பத்திரங்களை பதிவு செய்ய முடியாமல் மக்கள் ஏமாற்றமடைகின்றனர்.
பதிவுத்துறைக்கு கூடுதல் வருவாய்
இதுபோன்ற சிக்கல்களை தவிர்ப்பதற்காகவே, குறிப்பிட்ட சுபமுகூர்த்த தினங்களில் கூடுதலாக பத்திரவுப்பதிவுக்கான டோக்கன்கள் சார்பதிவாளர் அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகின்றன.
பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு என சொல்லப்படும் பெயிராவும் இதையே தொடர்ந்து வலியுறுத்தியபடி வருகிறது.. இதன் மூலம் பதிவுத்துறைக்கும் கூடுதல் வருவாய் கிடைப்பதுடன் பொதுமக்களின் விருப்பமும் நிறைவேறும் என்றும் தெரிவித்து வருகிறது...
நாளை சுபமுகூர்த்த தினம்
இந்நிலையில் நாளை சுபமுகூர்த்த தினத்தையொட்டி, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி, தமிழக அரசுக்கு மீண்டும் ஒரு கோரிக்கையை விடுத்துள்ளார்..
தமிழ்நாடு பதிவுத்துறை தலைவருக்கு எழுதியுள்ள அந்த கடிதத்தில், "நாளைய தினம் (புதன்கிழமை 28.01.2026) சுபமுகூர்த்த தினம் என்பதால், இந்நன்னாளில் பெரும்பாலான பொதுமக்கள் சொத்துக்கள் வாங்குவது சம்பந்தமான ஆவணங்களை பதிவு செய்வதில் மிகுந்த ஆர்வமும் - மகிழ்ச்சியும் மற்றும் மனதிருப்தியும் அடைகின்றார்கள்.
ஏமாற்றத்தில் மக்கள்
இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் குறிப்பாக பம்மல், பல்லாவரம், திருப்போரூர், படப்பை, செங்கல்பட்டு, ஆவடி, கூடுவாஞ்சேரி, வேளச்சேரி, தாம்பரம், திருப்பெரும்புதூர், நீலாங்கரை உள்ளிட்ட பல அலுவலகங்களில் ஆவண பதிவு செய்ய முன்பதிவு டோக்கன் இல்லை.
இதனால் பெரும்பாலான பொதுமக்களுக்கு முன்பதிவு டோக்கன் கிடைக்க பெறாமல் ஏமாற்றத்துக்கு உள்ளாகின்றார்கள்.
முன்பதிவு டோக்கன் கிடைக்கவில்லை
ஆகவே அவர்களின் உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் பதிவுத்துறை மதிப்பளித்து நாளை சுபமுகூர்த்த தினமான புதன்கிழமை (28.01.2026) அன்று ஆவண பதிவுகளை அனைத்து மக்களும் மேற்கொள்ளும் வகையில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் தேவையான அளவிற்கு கணிசமாக முன்பதிவு டோக்கன்களை உயர்த்தி வழங்கிட வேண்டுகிறோம்.
இதன் மூலம் பதிவுத்துறைக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதுடன் பொதுமக்களின் விருப்பமும் நிறைவேறும்.
எனவே தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர், இதனை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் மேற்கண்ட சுபமுகூர்த்த தினத்தில் தேவையான அளவிற்கு கூடுதலாக முன்பதிவு டோக்கனை கணிசமாக உயர்த்தி வழங்கிட தாங்கள் வழிவகை செய்ய வேண்டும்" என டாக்டர் ஹென்றி கேட்டுக் கொண்டுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications