சொந்த வீடு வாங்கறீங்களா.. சொத்து விற்பனை செய்ய போறீங்களா.. பத்திரப்பதிவு துறை போட்ட முக்கிய உத்தரவு
சென்னை: தமிழக மக்களின் நன்மைக்காக பல்வேறு அதிரடிகளை பதிவுத்துறை கையில் எடுத்து வருகிறது.. அந்த வகையில் இப்போதும் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
எப்போதுமே, நிலத்தை வாங்கி விற்பதற்கு பத்திரங்கள் என்பது மிகமிக அவசியமானது.. அதனால்தான், போலி பத்திரங்களை தயார் செய்து, நிஜ பத்திரிகைபோலவே உருவாக்கி மோசடிகள் அதிகரித்து வருகிறது.

ஆள் மாறாட்டம், போலியான ஆவணங்கள் மூலம் போலி பத்திரப்பதிவுகள் நடைபெறும் பட்சத்தில் அவை கண்டறியப்பட்டால், சார்பதிவாளரோ, பத்திரப் பதிவுத்துறை ஐஜியோ அதனை ரத்து செய்யக் கோரி, கோர்ட்டின் உதவியை சம்பந்தப்பட்டவர்கள் நாடலாம்.. அந்தவகையில், போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு மட்டுமே இதுநாள் வரை இருந்து வந்தது.
பத்திரப்பதிவு: ஆனால், அந்த நிலையை மாற்றி, இனி பத்திரப்பதிவுத்தலைவரே, போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் வகையில் அதிகாரம் வழங்கும் பத்திரப்பதிவு திருத்தச் சட்ட மசோதாவை, தமிழக சட்டசபையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதன்படி, போலி பத்திரம் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக பதிவாளர் கருதினால், அந்த பதிவை பதிவாளரே தானாக முன்வந்தோ, அல்லது யாரிடமிருந்து வரப்பெற்ற புகாரின் அடிப்படையிலோ, ஏன் அந்த பத்திர பதிவை ரத்து செய்யக்கூடாது? என்பதற்காக காரணத்தை கேட்டு அறிவிப்பை வெளியிட வேண்டும்.
மோசடி பத்திரங்கள்: அதுமட்டுமல்ல, அந்த பத்திரத்தை எழுதிக்கொடுத்தவர், பத்திரத்தின் அனைத்து தரப்பினர், தொடர்ச்சி ஆவணம் இருந்தால் அதன் தரப்பினர், பத்திரம் ரத்து செய்யப்பட்டால், அதனால் பாதிக்கப்படக்கூடிய தரப்பினருக்கு இந்த அறிவிப்பை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இப்படி போலி பத்திரத்தின் மூலம் ஏமாறுவதை தடுக்க அரசின் சார்பிலும் நடவடிக்கை எடுத்த பிறகும்கூட, இந்த மோசடிகள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது..
எங்கெல்லாம் மோசடி நடக்கிறதோ, அங்கெல்லாம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கைகள் பாய்ந்தபடியே உள்ளன.. இந்நிலையில், பதிவுத்துறை முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது, சொத்து விற்பனை பத்திரங்களை பதிவு செய்யும்போது, கள ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிகழ்வுகளை போட்டோக்களாக பத்திரத்தில் இணைப்பது நடைமுறையில் இருந்து வருகிறது..
தணிக்கை: எனினும், தனியாக சொத்தின் புகைப்படத்தை விண்ணப்பதாரரே இணைக்கும் நடைமுறை, அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரப்போகிறதாம்.. இந்த 2 வகையான போட்டோக்களையும் தனித்தனியாக இணைக்கப்படுகின்றனவா என்பதை, மாவட்ட பதிவாளர்கள் தணிக்கை செய்ய வேண்டும் என்று பதிவுத்துறை தற்போது உத்தரவிட்டிருக்கிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications