"டச்" பண்ணாதீங்க இதை மட்டும்.. ஆன்லைனிலேயே சொத்து வரி.. சென்னை மாநகராட்சி போட்ட மேஜர் உத்தரவு பாருங்க
சென்னை: சொத்துவரி மற்றும் தொழில் வரியை செலுத்துவது குறித்து, சென்னை மாநகராட்சி முக்கிய அட்வைஸ் ஒன்றை தந்துள்ளதுடன், பொதுமக்களையும் அலர்ட் செய்துள்ளது.
மாநகராட்சிக்கு முக்கிய வருவாய் இனம் சொத்துவரியாகும்... கிட்டத்தட்ட 13 லட்சம் சொத்து உரிமையாளர்கள் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது.. எனவே, வீடுகள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், கடைகள் மூலம் வருடத்துக்கு 2 முறை சொத்துவரி வசூலிக்கப்பட்டு வருகிறது.

சொத்துவரி: சொத்துவரி மற்றும் தொழில்வரியை தாமதமின்றி செலுத்தும் உரிமையாளர்களுக்கு ஊக்கப்பரிசும் வழங்கப்பட்டு வருவது வழக்கம்.. இந்த வரி வசூல் மூலம், சென்னை மாநகராட்சிக்கான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தல், தெரு விளக்குகள் அமைத்தல், தூய்மை பணிகள், பூங்காக்கள், சாலை பராமரித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன..
அந்தவகையில், இந்த அரைநிதியாண்டுக்கான சொத்து வரியை செலுத்த வேண்டும் என்று கடந்த ஜூன் மாதம் முதலே, சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி வருகிறது.. இந்த முறையும், சொத்துவரியை தாமதமின்றி செலுத்தும் உரிமையாளர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்பட உள்ளது.. குறிப்பாக, அரையாண்டு துவங்கும் முதல் 30 நாட்களில், சொத்துவரி செலுத்துவோருக்கு, வரியில் 5 சதவீதம், அதிகபட்சம் 5,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
கைவரிசை: இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் ஊக்கத்தொகை பெறுவதற்காக, அக்டோபர் 30க்குள் சொத்து வரியை செலுத்த வேண்டும் என்று மோசடி கும்பல், மாநகராட்சி பெயரில் மெசேஜ் அனுப்பி வருகிறதாம். அப்படி அனுப்படும் மெசேஜ்களில், "1xpl.co/01ASud" என்ற லிங்க்கும் தரப்படுகிறதாம். இந்த லிங்க்கை அழுத்தி உள்ளே செல்ல வேண்டாம் என்றும், மோசடி கும்பல் கைவரிசை காட்டுகிறது என்றும் மாநகராட்சி எச்சரித்துள்ளது..
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சொல்லும்போது, சென்னை மாநகராட்சியிலிருந்து, சொத்து உரிமையாளர் தந்திருக்கும் செல்போன் நம்பருக்கு மட்டுமே, நினைவூட்டல் மெசேஜ் (ரிமைண்டிங் மெசேஜ்) அனுப்பப்படும்..
இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால், http://www.chennaicorporation.gov.in என்ற வெப்சைட்டில் சொத்துவரியை செலுத்தலாம். மற்றபடி, மாநகராட்சி பெயரை பயன்படுத்தி வரும், வேறு எந்த இணையதள லிங்க்கையும் யாரும் தொட வேண்டாம், பணமோசடியிலும் சிக்கி கொள்ள வேண்டாம் என்று வார்னிங் தந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications