சொத்துவரி கட்டிட்டீங்களா.. இன்னும் கட்டலையா? உங்க சொத்தை "ஏலம்" விடப்போறாங்களாமே.. தமிழக அரசு அதிரடி
சென்னை: சொத்துவரி செலுத்தாதவர்கள் மீது விரைவில் நடவடிக்கை பாயப்போகிறதாம்.. இதுகுறித்து, தமிழக அரசு முக்கிய முடிவு ஒன்றையும் எடுக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படி நடவடிக்கை எடுக்கப்போவது இது முதல்முறையாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.
மாநகராட்சிக்கு முக்கிய வருவாய் இனம் சொத்துவரியாகும்... கிட்டத்தட்ட 13 லட்சம் சொத்து உரிமையாளர்கள் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது.. எனவே, வீடுகள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், கடைகள் மூலம் வருடத்துக்கு 2 முறை சொத்துவரி வசூலிக்கப்பட்டு வருகிறது.

கடைசி நாள்: கடந்த வருடம், சொத்துவரி உயர்த்தப்பட்ட பிறகு, நடப்பு ஆண்டின் சொத்துவரி இலக்கானது ரூ.1,600 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது... முதல் அரையாண்டிற்கான சொத்துவரி செலுத்த வருகிற 30-ந்தேதியே கடைசி நாளாகும். இப்போதைக்கு ரூ.605 கோடி சொத்துவரி வசூலிக்கப்பட்டு உள்ள நிலையில், மீதமுள்ள ரூ.200 கோடியை வசூலிக்க வருவாய்த்துறை அதிகாரிகள், ஊழியர்கள், தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அதனால், வருகிற 30ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று சொத்து உரிமையாளர்களுக்கு, எஸ்எம்எஸ் மூலம் மெசேஜ் அனுப்பப்பட்டு வருகிறது. ஒருவேளை 30-ந் தேதிக்கு பிறகு செலுத்தினால், 1 சதவீதம் அபராதம் கட்ட வேண்டுமாம்.. அதனால், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை உடனே செலுத்தி, அபராதத்தை தவிர்க்குமாறு மாநகராட்சி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
வரி இழப்பு: இதுஒருபுறம் என்றால், நீண்ட காலமாகவே சொத்துவரி கட்டாமல் இருப்பவர்கள் யார் யார் என்ற லிஸ்ட்டை மாநகராட்சிக்கு கையில் எடுத்துள்ளது.. காரணம், இப்படி வரியை செலுத்ததால், மாநகராட்சிக்கு வருவாய் இழப்பையும் ஏற்படுத்தியதாக கருதப்படுகிறது. அதனால், வரி செலுத்தாதவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை பாயப்போகிறதாம்..
கடந்த ஏப்ரல் மாதம் 13-ந்தேதி முதல் இதற்கான சட்ட விதி அமலுக்கு வந்துள்ள நிலையில், தற்போருத சம்பந்தப்பட்ட சொத்து உரிமையாளர்கள், வணிக நிறுவனங்கள் மீதான இறுக்கம் கூடிவருகிறது. இப்படி நீண்டகாலமாகவே சொத்துவரி செலுத்தாமல், 100 பேர் இருக்கிறார்களாம்.. அவர்கள் எல்லாம் ரூ.120 கோடி சொத்து வரி செலுத்த வேண்டுமாம்.. பலமுறை அவகாசம் தந்தும், இதுவரை சொத்துவரியை செலுத்தவில்லையாம்.
சொத்து வரி: எனவே, இவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.. அதன்படி, அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யப்பட்டு, ஏலம் விட்டு அதன் மூலம் சொத்துவரியை பெறவும் நடவடிக்கை எடுக்க போகிறார்களாம். அதனால், 30-ந் தேதிக்குள் சொத்துவரி செலுத்தாவிட்டால் சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கை தொடரும் என்று அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications