21 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் உத்தேச பட்டியல்.. இன்று வெளியாகும் அறிவிப்பு?
சென்னை: லோக்சபா திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் இன்று அல்லது நாளை வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேநேரம் உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் என்று சிலரின் பெயர்கள அடிபடுகின்றன. அதனை இப்போது பார்ப்போம்
லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி தொகுதி பங்கீட்டை வெற்றிகரமாக முடித்துள்ளது. 21 தொகுதிகளில் திமுக பேட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள், புதுச்சேரி என 10 தொகுதிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், ம.தி.மு.க., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

இநிலையில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 9 தொகுதிகளும், ம.தி.மு.க. போட்டியிடும் ஒரு தொகுதியும், தி.மு.க. போட்டியிட உள்ள 21 தொகுதிகளின் பட்டியலும் நேற்றுதான் இறுதியானது. இதன்படி
1. வடசென்னை.
2. தென்சென்னை.
3. மத்தியசென்னை.
4. ஸ்ரீபெரும்புதூர்.
5. காஞ்சீபுரம்.
6. அரக்கோணம்.
7. வேலூர்.
8. தர்மபுரி.
9. திருவண்ணாமலை.
10. ஆரணி.
ஈரோடு, கோவை, தேனி
11. கள்ளக்குறிச்சி.
12. சேலம்.
13. ஈரோடு.
14. நீலகிரி.
15. கோவை.
16. பொள்ளாச்சி.
17. பெரம்பலூர்.
18. தஞ்சை.
19. தேனி.
20. தூத்துக்குடி.
21. தென்காசி.
மேற்கண்ட 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது..
கடந்த லோக்சபா தேர்தலில் கடலூர், மயிலாடுதுறை, திண்டுக்கல், நெல்லை ஆகிய தொகுதிகள் தி.மு.க. போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதிகள் ஆகும். இதில் திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.. அதற்கு பதிலாக கடந்த முறை அக்கட்சி போட்டியிட்ட கோவை தொகுதியை திமுக வாங்கியுள்ளது. அதேபோல் கடலூர், மயிலாடுதுறை, நெல்லை 3 ஆகிய தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு திமுக விட்டுக் கொடுத்துள்ளது. அதற்கு பதிலாக ஆரணி, தேனி ஆகிய தொகுதிகளில் திமுக இந்தமறை களம் காண்கிறது. காங்கிரஸ் கட்சி வசம் இருந்த திருச்சி தொகுதியை ம.தி.மு.க. பெற்றுள்ளதால், அந்த கட்சியிடம் இருந்த ஈரோடு தொகுதியில் திமுக களம் இறங்குகிறது..
வேட்பாளர் பட்டியல் இன்று அல்லது நாளை: தமிழகத்தில் கூட்டணியை எப்படி இறுதி செய்ததோ, அதுபோல் திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலும் தயார் செய்யப்பட்டிருக்கிறதாம். இந்த பட்டியல் இன்று (செவ்வாய்க்கிழமை) அல்லது நாளையோ (புதன்கிழமை) வெளியாகலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
திமுக வேட்பாளர்கள் பட்டியல் மூத்தவர்கள், இளையவர்கள், பெண்கள் ஆகிய அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கூறியிருந்தார்.. அந்த வகையில் திமுக வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த பட்டியலை இப்போது பார்ப்போம்..
1. வட சென்னை- கலாநிதி வீராசாமி
2. மத்திய சென்னை- தயாநிதி மாறன்
3. தென் சென்னை-தமிழச்சி தங்கப்பாண்டியன்
4. ஸ்ரீ பெரும்புதூர்-டி.ஆர்.பாலு
5. அரக்கோணம்- ஜெகத்தரட்சகன்
6. காஞ்சிபுரம்- செல்வம்
7. திருவண்ணாமலை-அண்ணாதுரை
8. வேலூர்- கதிர் ஆனந்த்
9. தூத்துக்குடி-கனிமொழி
10. தஞ்சாவூர்-பழனிமாணிக்கம்
11. பொள்ளாச்சி- சண்முகசுந்தரம்
12.கள்ளக்குறிச்சி- கவுதம சிகாமணி
13. தருமபுரி-செந்தில்குமார்
14. நீலகிரி-ஆ.ராசா
ஆகிய 14 பேருக்கு நிச்சயம் இந்த முறை வாய்ப்பு இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோல் கோவை தொகுதியை பொறுத்தவரை மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகி திமுகவில் இணைந்த மகேந்திரனுக்கு வழங்க அதிக வாய்ப்பு உள்ளதாம், ஈரோடு தொகுதியில் திமுக இளைஞர் அணியின் துணைச் செயலாளர் பிரகாஷ் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளதாம். அதேபோல், சேலம் தொகுதியில் செல்வ கணபதி அல்லது உதயநிதி ஸ்டாலினின் நற்பணி மன்றத்தின் செயலாளராக இருந்த பி.கே.பாபு களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளதாம். தேனியில் தங்க தமிழ்செல்வன் வேட்பாளராக அறிவிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது..












Click it and Unblock the Notifications