முதல் முறையாக வரும் Vote from Home.. யாருக்கு பலன்? சாதக - பாதகங்கள் என்னென்ன?
Vote from home திட்டத்தில் இருக்கும் சாதக பாதக அம்சங்கள் என்ன என்பது பற்றி பார்க்கலாம்.
சென்னை : முதல் முறையாக எதிர்வரும் கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் Vote from home திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க இந்த வசதி கொண்டுவரப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கர்நாடகாவில் இந்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தேர்தலில் முதல் முறையாக Vote from home என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்காக 12டி என்ற படிவம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சாக்ஷம் எனும் செயலியையும் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்த உள்ளது.
சாதகம்
வாக்குப்பதிவு மையத்திற்கு வர இயலாத நிலையில் உள்ள முதியோர்களும், மாற்றுத்திறனாளிகளும், ஜனநாயகத்தில் தங்கள் பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பதற்கான உரிமையான வாக்குப்பதிவைச் செய்யலாம் என்பது இந்த முறையின் சாதகமான அம்சம்.
இதன் மூலம் பல லட்சக்கணக்கான முதியவர்களும், மாற்றுத்திறனாளிகளும் தேர்தல் வாக்குப்பதிவில் பங்கேற்பார்கள், வாக்குப்பதிவு சதவீதம் கணிசமாக உயரும் வாய்ப்பு உள்ளது.
சந்தேகம்
மறுபுறம் இந்தத் திட்டத்தால், முதியோர், மாற்றுத்திறனாளிகளின் வாக்குகளை ஆளுங்கட்சியினர் தங்களுக்குச் சாதகமான ஓட்டுகளாக மாற்ற அதிக வாய்ப்பிருப்பதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
Vote From Home திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், இந்த முறை மூலமாக பதிவு செய்யப்படும் வாக்குகளை கண்காணிக்க முடியுமா? இந்த திட்டத்தின் நம்பகத்தன்மை என்ன என்ற கேள்விகளையும் எதிர்க்கட்சிகள் எழுப்புகின்றன.
இந்தச் சந்தேகங்களைக் களைய, Vote From Home முறையில் மாதிரி வாக்குப்பதிவுகளை நடத்தி, பலகட்ட ஆய்வுகளுக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றன.












Click it and Unblock the Notifications