Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விபச்சாரத்துக்கு வாடகை பெண்கள்.. ஆன்லைன் டேட்டிங் ஆப்களில் "உல்லாசம்".. செல்போனில் சாக்கடை: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: செல்போன்கள் தவிர்க்க முடியாததாகிவிட்டன.. ஒரு மணி நேரம் செல்போன் இல்லாமல் இருக்க முடிவதில்லை.. இளைய தலைமுறைக்கு செல்போன் வேண்டாம் என்று சொல்லி தருவதைவிட, செல்போன்களை எப்படி கையாள வேண்டும் என்பதை கற்றுத்தரலாம்" என்று மூத்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன் கருத்து தெரிவித்துள்ளார். அத்துடன் செல்போனில் இளைய தலைமுறையினர் மூழ்கி சிக்கி கிடப்பதற்கும் வேதனை தெரிவித்துள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள ஒரு தனியார் பாரில், வாடகைக்கு பெண்கள் கிடைக்கிறார்கள் என்ற புகார் கடந்த மாதம் கிளம்பியது. இந்த பாரில் செல்லும் ஆண்கள், ஜோடியாக உள்ளே நுழைய வேண்டும். பிறகு, டான்ஸ் பெண்களை, டோக்கன் முறையில் தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.

Prostitution Rental Girls Dating App

அந்த பெண்களுடன், ஆண்கள் டான்ஸ் ஆடலாம். சுருக்கமாக சொன்னால், பணம் தந்தால் டோக்கன் முறையில் காதலிகள் வாடகைக்கு கிடைப்பார்கள்.

மது பாரில் பெண்கள்

தினமும் இரவு 7.30 மணிக்கு துவங்கும் இந்த பாரில் நுழைவு கட்டணம் 1000 ரூபாய் வசூலாகிறது.. வாடகை காதலிக்கு 200 ரூபாய்.. டோக்கன் அடிப்படையில் பணம் வசூலாகிறது. இது தொடர்பாக ஒருவர் தேனாம்பேட்டை போலீசிலும் புகார் தந்திருந்தார்.

இதுகுறித்து, King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்திருந்த குற்றவியல் வழக்கறிஞர் தமிழ் வேந்தன், "மது பாருக்குள் நுழைந்ததுமே மது குடித்துவிட்டு, அங்கிருந்து உடனே கிளம்பக்கூடாது என்பதற்காகவும், பணத்தை செலவழித்து பொழுதை கழிக்க வேண்டும் என்பதற்காகவும்தான் இப்படியான நடன கலாச்சாரங்கள் பார்களில் முதன்முதலாக கொண்டுவரப்பட்டன.

சில்லறை விற்பனை கூடம்

இப்போது டோக்கன் முறை கொண்டுவரப்பட்டுள்ளது.. ஓட்டலுக்கு வருபவர்கள் முன்கூட்டியே டோக்கன் வாங்கிவிட வேண்டும். பிறகு நடனமாடும் பெண்களை பிடித்திருந்தால், அவர்களை உல்லாசத்துக்கு அழைத்து செல்லலாம்.

டாஸ்மாக்குகளை அரசுடைமையாக்கப்பட்டதுபோல், பப்களையும், விபச்சாரத்தையும் சட்டப்பூர்வமாக்கலாமே? இதனால், பலாத்கார சம்பவங்கள் முழுமையாக குறையாது என்றாலும் மட்டுப்படுத்தப்படும். கலாச்சார கட்டமைப்பு என்று காலம் காலமாக சொல்லி கொண்டிருக்கிறோமே தவிர, எய்ட்ஸ் பாதிப்பில் 2வது இடத்தில் நாம்தான் உள்ளோம்.

லைசென்ஸ் கிடையாது

மதுபான சில்லறை விற்பனை கூடம் வைக்க தான் நமக்கு உரிமை உள்ளதே தவிர, அங்கேயும் மது அருந்தக்கூடாது. எனவே பார் என்பதே இல்லீகல்தான்.. பார்களுக்கு லைசென்ஸ்களும் கிடையாது" என்றெல்லாம் கூறியிருந்தார்.

இந்நிலையில், ஆன்லைனில் டேட்டிங் ஆப்பில் நடக்கும் விபச்சாரம் குறித்து BBT Cinema யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ளார்.. அதில், "LGBTQ, கிரைண்டர் போன்ற புதிதாக வரும் ஆப்களை நம்மால் தடுக்க முடியாது..

டிராய் இல்லை

டிராய் நம்மிடம் இல்லை.. மத்திய அரசிடம் அதற்கான உரிமை உள்ளது.. டிக்டாக், ஹலோ, உள்ளிட்ட சீன ஆப்களை தடுத்தார்கள்.. டிக்டாக்கில் கோமாளித்தனங்கள் செய்து கொண்டிருந்த சிலரை அதில் தடுத்து நிறுத்தியிருந்தார்கள்..

ஆனால், உண்மையை சொல்லப்போனால் தற்போதுள்ள புளூ வேல் போன்ற ஆப்கள் தான் ஆபத்தானவை.. ஆன்லைன் சூதாட்டம் இதைவிட ஆபத்தானது.. தமிழக அரசு இதற்காக போராடி, சுப்ரீம் கோர்ட் சென்று, கடைசியில் ஆர்டர் பெற்று வந்தார்கள்.. ஆனாலும் சில இடங்களில் வேற வேற கம்பெனிகள் மூலமாக ஆன்லைன் சூதாட்டங்கள் உள்ளே வருகின்றன..

ஆப்கள்தான் இன்று அனைத்துக்குமே தேவையாகிவிட்டது.. நான் பிற்போக்குத்தனமாக பேசுவதாக்ககூட தோன்றலாம்.. ஆனால் இன்னும் 25 வருடங்களில் செல்போன் என்பது நிர்வாண சாக்கடையாகிவிடும்..

செல்போன் சாக்கடை

செல்போன்களை இனிமேல் தடுக்க முடியாது.. சமீபத்தில் ஒரு பையன் விபத்தில் சிக்கிவிட்டான்.. அவரது செல்போனை எடுத்து, அவரது வீட்டுக்கு தகவல் சொல்லலாம் என்றால், செல்போனில் பாஸ்வேர்டு போட்டு லாக் செய்திருக்கிறார்.. எப்படி தகவல் தருவது? ஜி.பேவுக்கு பாஸ்வேர்டு போடலாம்.. செல்போனுக்கே போட்டால் அவசரம் ஆபத்துக்கு என்ன செய்வது?

இப்போது ஒரு மணி நேரம் செல்போன் இல்லாமல் இருக்க முடிவதில்லை.. இளைய தலைமுறைக்கு செல்போன் வேண்டாம் என்று சொல்லி தருவதைவிட, செல்போன்களை எப்படி கையாள வேண்டும் என்பதை கற்றுத்தரலாம்" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+