பொங்கலுக்கு நாங்க ஜனநாயகன் படம் பார்த்தே ஆகணும்! இல்ல கமலாலயத்திற்கு வருவோம்! சீறிய வீரலட்சுமி
சென்னை: ஜனநாயகன் படம் பொங்கலுக்கு ரிலீஸாகவில்லை என்றால் சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தை முற்றுகையிடுவோம் என தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: சகோதரர் நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் தமிழர் திருநாளான தை பொங்கல் திருநாள் அன்று தமிழர்கள் பார்க்கவில்லை என்றால் சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தை தமிழர் முன்னேற்றப் படை முற்றுகையிடும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனநாயகன் திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் கோரி தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததது. 'ஜனநாயகன்' படத்திற்குத் தடங்கல்கள் ஏற்படுத்தும் விதமாக தணிக்கை வாரியம் செயல்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்ததும், நடிகர் விஜய்க்கு ஆதரவாகப் பலரும் குரல் கொடுக்கத் தொடங்கினர். திரைப்பிரபலங்களைத் தாண்டி, அரசியல் கட்சி நிர்வாகிகளும் இப்படத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
குறிப்பாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கிரிஷ் சோடங்கர், எம்.பி. மாணிக்கம் தாகூர், எம்.பி. ஜோதிமணி, விஜய் வசந்த், பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் இந்த விவகாரத்தில் பாஜக அரசை விமர்சித்திருந்தனர். அதே சமயம், இந்தப் பிரச்சனையை அரசியலாக்கக் கூடாது என்ற கருத்தும் மேலோங்கியது.
'இந்தப் பிரச்சனைக்கு, நடிகர் விஜய் அல்ல, அரசியல்வாதி விஜய் தகுந்த பாடம் புகட்டுவார்' என ஒரு குரல் ஓங்கி ஒலித்த நிலையில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.
அப்போது தனி நீதிபதி ஆஷா, ஜனநாயகன் படத்திற்கு உடனடியாக யு/ஏ தணிக்கைச் சான்றிதழை வழங்குமாறு உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் இதை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா, அருள் முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது படத்திற்கு தணிக்கை சான்றிதழே பெறாமல் எப்படி ரிலீஸ் தேதியை அறிவித்தீர்கள். குறிப்பிட்ட தேதியில் படத்தை வெளியிட வேண்டும் என கூறி போலி அழுத்தம் தரப்படுகிறது. ஒரு தேதியை நீங்களே நிர்ணயித்துவிட்டு நீதிபதிகளுக்கு அழுத்தம் தர முடியாது.
பல்வேறு நடைமுறைகள் உள்ள போது சான்றுக்காக பொறுமையாக காத்திருக்க வேண்டும். ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டீர்கள் என்பதற்காக உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப செயல்பட முடியாது என கண்டித்த நீதிபதிகள், இந்த வழக்கை வரும் ஜனவரி 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இதனால் ஜனநாயகன் படம் பொங்கலுக்கு வெளியாகாது.
இந்த நிலையில்தான் வீரலட்சுமி விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார். விஜய் மாநாடு, பொதுக் கூட்டங்களில் தவெகவினரின் அட்டகாசத்தை கண்டித்திருந்த வீரலட்சுமி, "விஜய் ரசிகர்களுக்கு யாரும் பெண் தராதீர்கள். அது போல் ரசிகைகளை யாரும் திருமணம் செய்யாதீர்கள், காதலிக்காதீர்கள்" என கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது வீரலட்சுமி, "சகோதரர் நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் தமிழர் திருநாளான தை பொங்கல் திருநாள் அன்று தமிழர்கள் பார்க்கவில்லை என்றால் சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தை தமிழர் முன்னேற்றப் படை முற்றுகையிடும்" என தெரிவித்துள்ளார். ஜனநாயகன் படம் வெளியாகாததற்கு தயாரிப்பு நிறுவனம் மன்னிப்பு கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications