இரவில் வீடியோ கால்.. வாட்ஸ் ஆப்பில் ஆபாச வீடியோக்களை பகிர்ந்த பத்ம சேஷாத்ரி ஆசிரியர் ராஜகோபாலன்
சென்னை: இரவில் வீடியோ காலில் தொந்தரவு செய்யும் பத்ம சேஷாத்ரி பால பவன்பள்ளியின் வணிகவியல் ஆசிரியர், மாணவிகளுக்கு வாட்ஸ் ஆப்பில் ஆபாச படங்களின் வீடியோ லிங்குகளையும் ஷேர் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
சென்னை கே கே நகரில் உள்ளது பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளி. திரை பிரபலங்கள், அவர்களின் பிள்ளைகள் இந்த பள்ளிகளில் படித்து வருகிறார்கள். பிரபலமான பள்ளிகளில் இதுவும் ஒன்று.
இந்த பள்ளியில் 20 ஆண்டுகளாக வணிகவியல் துறையை கற்பிக்கும் ராஜகோபாலன் என்ற ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக புகார்கள் வெளியாகின.

துன்புறுத்தல்
இதுகுறித்து முன்னாள் மாணவி ஒருவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறுகையில் ஆசிரியர் ராஜகோபாலன் பள்ளி வகுப்பறையில் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருகிறார். எனது தோழி ஒருவரை சினிமாவுக்கு அழைத்தார். வாட்ஸ் ஆப் குரூப்களில் ஆபாச வீடியோ லிங்குகளை அனுப்புகிறார். ஆன்லைன் வகுப்புகளில் வெறும் துண்டை மட்டும் கட்டிக் கொண்டு வருகிறார் என புகார் அனுப்பினார் மாணவி.

பொருந்தாத செயல்
இதுகுறித்த ஸ்க்ரீன்ஷாட்டுகளையும் அந்த மாணவி அனுப்பியுள்ளார். வாட்ஸ் ஆப்பில் அந்த ஆசிரியர் இன்று நீ ப்ரீயாக இருந்தால் நாம் சினிமாவுக்கு போகலாமா என கேட்டுள்ளார். அதற்கு மாணவி பதிலளிக்கையில், சார் ஒரு ஆசிரியருக்கு இது பொருந்தாத செயல். டீச்சர், மாணவர் உறவெல்லாம் பள்ளி, வகுப்பறைகள், பாடத்துடன் முடிந்துவிட்டது.

பாதிக்கப்பட்ட மாணவி
தற்போது கொரோனா தொற்று காலத்தில் பொறுப்புள்ள குடிமகளாக நான் எங்கும் வெளியே வர விரும்பவில்லை என அந்த மாணவி தெரிவித்துள்ளார். அதற்கு அவர் நான் உன்னை எனது மகளாக பார்க்கிறேன் என பதில் அனுப்பியுள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவி புகார் தெரிவித்துள்ளார்.

புகார்
இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்ட போது இதுகுறித்து எந்த புகாரும் இதுவரை எங்களுக்கு வரவில்லை. முறைபடி மாணவிகள் புகார் செய்தால் வெளிப்படைத்தன்மையாக விசாரித்து ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளோம் என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications