தவெகவை அப்செட்டாக்கிய சர்வே முடிவுகள்.. ஜான் ஆரோக்கியசாமிக்கு வந்ததே கோபம்.. இப்படி சொல்லிட்டாரே!
சென்னை: தமிழகத் தேர்தல்களை எந்த ஒரு கருத்துக் கணிப்பாலோ அல்லது தேர்தல் நிபுணர்களாலோ ஒருபோதும் துல்லியமாகக் கணிக்க முடியாது என்று தமிழக வெற்றிக் கழகத்தின் முதன்மை வியூகவாதி ஜான் ஆரோக்கியசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், வரும் மே 4-ஆம் தேதி வெளியாகப்போகும் தேர்தல் முடிவுகள், அனைத்துப் புள்ளிவிவரங்களையும் முறியடித்துப் புதிய வரலாற்றைப் படைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். தமிழக மக்கள் எப்போதுமே தனித்துவமான முறையில் சிந்தித்து வாக்களிப்பவர்கள் என்றும், அந்த மரபு 2026 தேர்தலிலும் தொடரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, இந்தத் தேர்தல் வாக்காளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும், அதே சமயம் தேர்தல் முடிவுகளைக் கணிக்க முயலும் ஆய்வாளர்களுக்கு ஒரு சிம்மசொப்பனமாகவும் அமையும் என அவர் கூறியுள்ளார்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இந்த சட்டசபை தேர்தலில் வெற்றிபெறாது என்று பல்வேறு கணிப்புகள் கூறும் நிலையில், ஜான் ஆரோக்கியசாமியின் இந்த அதிரடி கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அக்னி சர்வீஸ் கணிப்பு
தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் 34,220 வாக்காளர்களிடம் அக்னி நியூஸ் சர்வீஸ் நிறுவனம் நடத்திய மெகா சர்வே வெளியாகி உள்ளது. சர்வே முடிவுகளின்படி, இப்போதைக்கு ஆளுங்கட்சியான தி.மு.க கூட்டணிதான் 'கிங்'. அதாவது ஆளும் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும். முதல்வர் ஸ்டாலின் மீண்டும் பதவி ஏற்பார். எதிர்க்கட்சி வரிசையில் அதிமுக அமரும். இரண்டாவது முறையாக சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வி அடையும்.
தி.மு.க கூட்டணி: 45.4% வாக்குகளை வென்று, ஆட்சி அமைக்கும் .
அ.தி.மு.க கூட்டணி: 35.3% வாக்குகளை வெல்லும்.
தமிழக வெற்றிக் கழகம் (TVK): 11.5% வாக்குகளை வெல்லும்.
விஜய்யின் தவெக முதல் தேர்தலிலேயே இரட்டை இலக்க வாக்கு சதவீதத்தை (11.5%) எட்டிப் பிடித்திருப்பது, திராவிடக் கட்சிகளின் வாக்கு வங்கியில் ஒரு சிறிய 'டென்ட்' போட்டிருப்பதை உறுதி செய்கிறது. வாக்கு சதவீதத்தை விட, அது இடங்களாக மாறும்போதுதான் மேஜிக் நிகழ்கிறது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் முன்னிலை நிலவரம்:
தி.மு.க கூட்டணி: 178 இடங்கள் வென்று ஆட்சி அமைக்கும். அதோடு தனிப்பெரும் மெஜாரிட்டி பெற்று ஆட்சி அமைக்கும். இதனால் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை. யாரும் ஆட்சியில் பங்கு கேட்க வாய்ப்பு இல்லை.
அ.தி.மு.க கூட்டணி: 56 இடங்கள் வெல்லும்.
தமிழக வெற்றிக் கழகம் கணிசமான வாக்குகளைப் பிரித்தாலும், அவை தொகுதிகளாக மாறுவதில் இன்னும் சில சவால்கள் இருப்பதை சர்வே காட்டுகிறது.
இந்த சர்வேயின் மிக முக்கியமான 'அலர்ட்' இதுதான். சுமார் 21 தொகுதிகளில் வெற்றி வித்தியாசம் என்பது 5% க்கும் குறைவாகவே இருக்கிறது. அதாவது, கடைசி நேர திசைமாற்றங்கள் இந்த தொகுதிகளின் முடிவை மாற்றக்கூடும். இங்கு தமிழக வெற்றிக் கழகம் பிரிக்கும் வாக்குகள்தான் அ.தி.மு.க அல்லது தி.மு.க-வின் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாக (Deciding Factor) இருக்கப்போகிறது.
இந்த நிலையில்தான் தமிழகத் தேர்தல்களை எந்த ஒரு கருத்துக் கணிப்பாலோ அல்லது தேர்தல் நிபுணர்களாலோ ஒருபோதும் துல்லியமாகக் கணிக்க முடியாது என்று தமிழக வெற்றிக் கழகத்தின் முதன்மை வியூகவாதி ஜான் ஆரோக்கியசாமி தெரிவித்துள்ளார்.
-
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
உதிருது இரட்டை இலை! 4 இல்ல.. 10 பேர்! தவெகவுக்கு தாவும் 6 சமஉ.க்கள்? தனிப்பெரும்பான்மை நோக்கி விஜய் -
வேலுமணி அணி வைத்த டிமாண்ட்.. எடப்பாடி பழனிசாமி என்ன சொன்னார்? அதிமுகவுக்கு குட் நியூஸ்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
எடப்பாடிக்கு டிமிக்கி கொடுக்கும் 11 பேர்.. எஸ்கேப்பாகும் வேலுமணி.. அதிர்ச்சிக்கு ரெடியாகிறதா அதிமுக? -
ஜனநாயக படுகொலை.. எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்வோம்! விஜய் செய்தது ஒரு மோசடி! அட்டாக் மோடில் அன்புமணி -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
கண்கள் பனித்தது.. இதயம் இனித்தது! எடப்பாடி தான் எங்களுக்கு பொதுச் செயலாளர்! யூடர்ன் அடித்த வேலுமணி!












Click it and Unblock the Notifications