'செயல்வீரர் உதயநிதி ஸ்டாலின்'.. சபரீசன் குறித்து பிடிஆர் சொன்ன விளக்கத்தை கவனித்தீர்களா?
சென்னை: நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அண்ணாமலை வெளியிட்ட பிடிஆர் லீக்ஸ் ஆடியோ முற்றிலும் போலியானது என இன்று விளக்கம் அளித்தார். அப்போது பிடிஆர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் குறித்தும் விளக்கம் அளித்துள்ளார். அவர்களை பற்றி பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் என்ன கூறினார் என்பதை பாருங்கள்.
கடந்த ஒரு வாரத்தில் இரண்டு முறை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியகராஜன் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியானது. முதல் ஆடியோ சவுக்கு சங்கரும், இரண்டாவது ஆடியோவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் வெளியிட்டனர். முதல் ஆடியோவில் உதயநிதி குறித்து சபரீசன் குறித்து பிடிஆர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாஜகவினர் குற்றம்சாட்டினர்.

இதனை திட்டவட்டமாக மறுத்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், போலியான ஆடியோ என்று மறுத்து அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில் இரண்டாவது ஆடியோவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். முதல் ஆடியோவைவிட இரண்டாவது ஆடியோவில் பல்வேறு விஷயங்கள் பிடிஆர் பேசுவது போன்று இருந்தது.
இந்நிலையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், இது ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலியாக உருவாக்கப்பட்ட ஆடியோ என்றும், இந்த ஆடியோ தான் பேசியது அல்ல என்றும், பொய்யான ஆடியோ என்றும் விளக்கம் அளித்துள்ளார். பாஜக மாநில தலைவர அண்ணாமலை தரம் தாழ்ந்து பகிர்ந்துள்ளார் என்றும் கீழ்தரமானது என்றும் பிடிஆர் விமர்சித்தார்.
உதயநிதி அமைச்சராக ஆசைப்பட்டவன் நான்: இந்நிலையில் இன்று வெளியிட்டுள்ள வீடியோவிலும் சரி, அறிக்கையிலும் சரி, முதல்வர் ஸ்டாலினை மட்டுமின்றி, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்தும், முதல்வரின் மருமகன் சபரீசன் குறித்தும் பாராட்டி உள்ளார். அதனை இப்போது பார்ப்போம். "எங்களது நம்பிக்கை நட்சத்திரமான மாண்புமிகு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பொதுமக்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் மகத்தான வரவேற்பை பெற்றுள்ளார். இதைப் பார்த்து அவரை அமைச்சராக்க வேண்டும் என்று தலைவரிடம் வலியுறுத்தியவர்களில் நானும் ஒருவன்.
ஆற்றல்மிகு செயல்வீரர் உதயநிதி : அனைவரது எதிர்பார்ப்பையும் விஞ்சி அமைச்சர் உதயநிதி அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். முதலமைச்சரைப் போலவே கள ஆய்வும் சிறப்பாக நடத்தி வருகிறார். தமிழக விளையாட்டு துறையை நோக்கி உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இப்படிப்பட்ட ஆற்றல்மிகு செயல்வீரரைக் குறித்து நான் எப்படி தவறாகப் பேசுவேன்? அதேபோன்று, நமது திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து அமைச்சர்களும் ஓரணியாக ஒன்றுபட்டு மகத்தான சாதனைகளை எய்தும் வண்ணம் செயல்பட்டு வருகின்றனர். அவ்வாறு இருக்கையில் நான் ஏன் அவர்களைப் பற்றி தவறாக பேசவேண்டும்?

சபரீசன் நல்ல வழிகாட்டி: நான் அரசியலுக்கு வந்தது முதல் எனக்கு நல்ல வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும், உறுதுணையாகவும் இருப்பவர் திரு. சபரீசன் அவர்கள். எதிர்க்கட்சிகள் கூட உதயநிதி மற்றும் சபரீசன் மீது எந்த குற்றச்சாட்டும் வைக்கவில்லை. எனவே, அவர்கள் மீது களங்கம் சுமத்தும் வீண் முயற்சியில் இதுபோன்ற ஜோடிக்கப்பட்ட ஆடியோக்கள் உருவாக்கப்படுகின்றன.
பிளாக்மெயில் கும்பல்: இவர்களிடம் இருந்து என்னைப் பிரிப்பதன் மூலமாக தங்களது அரசியல் எண்ணங்களை நிறைவேற்றத் துடிக்கிறது ஒரு பிளாக் மெயில் கும்பல். ஆனால் இது போன்ற கோழைத்தனமான முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது. தி.மு.கழகம் தொடங்கிய காலத்திலிருந்தே, ஒரே இயக்கம், ஒரே கட்சி, ஒரே குடும்பம் என அனைவரும் ஒற்றுமையுடன் இயங்கி வருகிறோம். இனி வரும் காலங்களிலும் அவ்வாறே தொடர்வோம்" இவ்வாறு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அந்த விளக்கத்தில் கூறியுள்ளார்.
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ குறித்து விளக்கம் அளித்துள்ள நிலையில் , சமூக வலைதளங்களில் திமுக ஆதரவாளர்கள் பலர், அவருக்கு ஆதரவு அளித்துள்ளனர். அதேநேரம் பாஜக மற்றும் வலதுசாரி ஆதரவாளர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு பதிலடியும் கொடுத்து வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே ஆடியோ விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது
-
தலைவரை ஓரங்கட்டியவர்களுக்கு எதுக்கு வாக்கு! அண்ணாமலை ஆர்மி உள்ளடி வேலை! புலனாய்வில் இறங்கிய கமலாலயம் -
கோவை திமுகவை அழிக்க செந்தில் பாலாஜி ஸ்கெட்ச்.. அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
தமிழ்நாட்டில் எம்.பி சீட் 39-லிருந்து 59 ஆக உயரும்.. எண்ணிக்கை குறையாது.. - அண்ணாமலை சொன்ன தகவல் -
“கட்சியால் புறக்கணிக்கப்பட்டவர்”.. கரூர் ரோபோக்கள் என விமர்சித்த அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி பதிலடி -
முத்துராமலிங்கத் தேவரின் மறு உருவம் அண்ணாமலையா.. செல்லூர் ராஜு பேச்சால் கொந்தளித்த மாணிக்கம் தாகூர்! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன்












Click it and Unblock the Notifications