"அப்படி மட்டும் நடந்தால்.. அரசியலை விட்டே விலகி விடுவேன்.." பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஒரே போடு!
"இந்த கற்பனைவாதியின் குழப்பங்களை நான் புறக்கணித்துவிட்டேன். இது 100% பைத்தியக்காரத்தனமான கருத்து என்பதால் இது பற்றி விளக்கம் கொடுக்கிறேன்."
சென்னை: மகளிருக்கான ரூ.1000 உரிமைத் தொகை திட்டத்தை விமர்சித்த நபர் கைது செய்யப்பட்டு இருப்பதற்கு பிடிஆர் காரணம் என்று சவுக்கு சங்கர் தெரிவித்து இருந்த நிலையில், அவரது விமர்சனம் தன்னை தொல்லை செய்யும்போது அரசியலை விட்டே விலகி விடுகிறேன் என்று தெரிவித்து உள்ளார்.
கடந்த திங்கள் கிழமை சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது பல்வேறு தரப்பிலிருந்து வரவேற்புகளை பெற்றது.
திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற இந்த வாக்குறுதி பெண்கள் உட்பட பல்வேறு தரப்பினரை மகிழ்ச்சியடைய செய்து இருக்கும் நிலையில் எதிர்க்கட்சிகள் இதனை விமர்சித்து வருகின்றனர். சிலர் ஒரு படி மேலேபோய் நிதியுதவி பெறும் பெண்களை தரக்குறைவாக விமர்சித்தனர்.

நிதியமைச்சர் பேச்சு
பட்ஜெட் உரையில் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று நாங்கள் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளோம். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மகளிருக்கு உரிமைத் தொகை தரப்படும் என்ற இந்த வாக்குறுதியையும் உறுதியாக நிறைவேற்றிட வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள்.

மாதம் ரூ.1000 உரிமைத் தொகை
அதன் அடிப்படையில், தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்பட இருக்கிறது என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். ஒன்றிய அரசால் பெருமளவு உயர்த்தப்பட்டுள்ள சமையல் எரிவாயு விலை, விலைவாசி உயர்வால் அதிகரிக்கும் குடும்பச் செலவுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் 1,000 ரூபாய் என்பது அவர்களது அன்றாட வாழ்க்கைக்குப் பேருதவியாக இருக்கும்.

அண்ணா பிறந்தநாள் முதல்
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் திட்டம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டான இந்த ஆண்டில், திராவிட இயக்க மாதம் என சொல்லத்தக்க செப்டம்பர் மாதத்தில், தாய் தமிழ்நாட்டின் தலைமகன் - பேரறிஞர் பெருமகன் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் முதல் இத்திட்டம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது.

நிதி ஒதுக்கீடு
இத்திட்டத்தின் கீழ் மகளிர் பயன்பெறுவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும். தமிழ்நாட்டு மகளிரின் சமூக பொருளாதார வாழ்வில் ஒரு புரட்சியை ஏற்படுத்தக்கூடிய இத்திட்டத்திற்காக, இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 7,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது." என்று தெரிவித்தார்.

வாய் ஆப் சாக்கு
இந்த நிலையில் இந்த அறிவிப்பை விமர்சிக்கும் வகையில் செந்தில், கவுண்டமணி நகைச்சுவை வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் பிடிஆரை விமர்சிக்கும் வகையில் மீம் வீடியோ ஒன்றும் பகிரப்பட்டது. இதனை பகிர்ந்த Voice of Savukku என்ற ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்ட அதன் அட்மின் பிரதீப் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

சவுக்கு சங்கர் ட்வீட்
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட சவுக்கு சங்கர், "நிதியமைச்சர் பிடிஆர் முதலமைச்சர் மற்றும் காவல்துறையினர் வாய்ஸ் ஆப் சவுக்கு அட்மினை கைது செய்யுமாறு வலியுறுத்தி இருக்கிறார். இந்த பற்றாகுறை பட்ஜெட்டை யாரும் விமர்சிக்கக் கூடாது என அவர் நினைக்கிறார். அரசை நினைத்து வெட்கப்படுகிறேன்.

பிடிஆர் விளக்கம்
இதுகுறித்து ட்விட்டரில் விளக்கம் கொடுத்து உள்ள பிடிஆர், "இந்த கற்பனைவாதியின் குழப்பங்களை நான் புறக்கணித்துவிட்டேன். இது 100% பைத்தியக்காரத்தனமான கருத்து என்பதால் இது பற்றி விளக்கம் கொடுக்கிறேன். அந்த ட்விட்டர் கணக்கு பற்றி எனக்கு தெரியாது. நான் அந்த வீடியோவை பார்க்கவும் இல்லை புகாரளிக்கவும் இல்லை.

அரசியலை விட்டே விலகிவிடுவேன்
இடைநீக்கம் செய்யப்பட்ட டி.வி.ஏ.சி எழுத்தாளரால் (சவுக்கு சங்கரை குறிப்பிடுகிறார்) சுமத்தப்படும் மாநில அரசின் பட்ஜெட் மீதான விமர்சனங்கள் என்னை ஒருவேளை அசைத்து பார்த்தது என்றால், நான் அரசியல் வாழ்க்கையை விட்டே விலகிவிடுவேன்." இவ்வாறு பிடிஆர் தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications