• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்த போட்டோவ பாருங்க.. பிடிஆருக்கு இப்படி ஒரு திறமையா? நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்

Google Oneindia Tamil News

சென்னை: பொருளாதாரத்தில் திறன்மிக்கவராக பார்க்கப்படும் தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது மற்றொரு திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

தமிழ்நாடு நிதியமைச்சராக இருந்து வருபவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். நீதிக்கட்சியை நிறுவிய பி.டி.ராஜன் அவர்களின் பேரனும், முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜனின் மகனுமான இவர் பொருளாதாரத்தில் தேர்ந்தவர்.

கடந்த 1990 ஆம் ஆண்டு ஆபரேஷன்ஸ் அண்ட் சிஸ்டம்ஸ் மேம்பாட்டில் சுயாதீன ஆலோசகராக பணியை தொடங்கிய அவர், 2001 ஆம் ஆண்டு பிரபல லேமன் பிரதர்ஸ் நிறுவனத்தில் மேலாளராக பதவியேற்றார்.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீச்சு.. பாஜகவைச் சேர்ந்த 5 பேர் கைது! அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீச்சு.. பாஜகவைச் சேர்ந்த 5 பேர் கைது!

பணி

பணி

பின்னர் லேமன் பிரதர்ஸ் நிறுவனத்திலிருந்து விலகி 2008 ஆம் ஆண்டு ஆஃப்ஷோர் கேபிடல் மார்க்கெட் என்ற நிறுவன தலைவரானார். இதையடுத்து சிங்கப்பூரில் ஸ்டாண்டர்ட் சாட்டர்ட் வங்கிப் பணியில் சேர்ந்த அவர், 2014 ஆம் ஆண்டு அதிலிருந்து விலகி, மதுரைக்கு வந்து அரசியலில் ஈடுபடத் தொடங்கினார்.

அரசியல்

அரசியல்

2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அவர், இந்த முறை நிதியமைச்சராக பதவியேற்று இருக்கிறார். மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள், பொருளாதார வளர்ச்சி தொடர்பான அவரது பேச்சுக்கள் இந்திய அளவில் விவாதப் பொருளாகி வருகின்றன.

நியூயார்க்

நியூயார்க்

பொருளாதார வல்லுநராக பார்க்கப்படும் பிடிஆரின் மற்றொரு திறமையும் தற்போது வெளிப்பட்டு உள்ளது. கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி பேஸ்புக்கில் பிடிஆர் ஒரு படத்தை பகிர்ந்தார். அதில் அவர் தெரிவித்து இருப்பதாவது, "என்னுடைய புகைப்படங்களை தேதி வாரியாக தொகுத்துவைத்துள்ளேன், இது செப்டம்பர் 7, 2006 ஆம் நாள் அதாவது 16 ஆண்டுகளுக்கு முன்பு என்பதை கணினி நினைவூட்டுகிறது! சில நேரங்களில் எனது அபார்ட்மெண்ட் பால்கனியில் ட்ரைபாட் அமைத்து, அன்றைக்கு என்னிடமிருந்த பிரத்யேக DSLR கேமரா (இன்றைக்கு அது தொல்பொருள்) மூலம் நியூயார்க் நகரின் தொடுவானை படம் பிடிப்பேன். அது ஓர் முழு நிலவு நாள்." என்று குறிப்பிட்டார்.

சிங்கப்பூர்

சிங்கப்பூர்

இந்த நிலையில் நேற்று அவர் 2 படங்களை அவர் பேஸ்புக்கில் வெளியிட்டார். அதில், "நான் பதிவிட்ட படத்திற்கு எதிர்பாராமல் கிடைத்த நேர்மறையான பின்னூட்டங்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதுடன், இதோ சிங்கப்பூர் மெரினா பேயில் உள்ள எனது குடியிருப்பில் இருந்து டிசம்பர் 31, 2013 அன்று எடுத்த 2 படங்கள் : ஒளியில் மேற்கொண்ட ஆய்வுகள் (சாளரத்தால் சிதைக்கப்பட்டது)
என் D70 கேமரா மூலம் பல ஆண்டுகளாக நான் படம்பிடித்த ஒளியின் பரப்பைக் காண்பிக்க மேலும் சில நியூயார்க் பால்கனி புகைப்படங்களைக் கண்டுபிடிப்பேன்." என்று கூறியுள்ளார்.

English summary
PTR expressed his photography skills and get positive response: பொருளாதாரத்தில் திறன்மிக்கவராக பார்க்கப்படும் தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது மற்றொரு திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X