EXCLUSIVE: "மிட்நைட் மீட்டிங்".. தவிக்கும் டாக்டர் சரவணன்.. மேலிடத்துக்கு பறந்த லெட்டர்.. என்னாச்சு?
டாக்டர் சரவணன் திமுகவில் இணையாதது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது
சென்னை: பாஜகவில் இருந்து விலகிய, டாக்டர் சரவணன் ஏன் இன்னும் திமுகவில் இணையாமல் இருக்கிறார்? எதற்காக அவசரப்பட்டு பாஜகவில் இருந்து விலகினார்? மதுரை திமுகவில் என்னதான் நடக்கிறது?
டாக்டர் சரவணனை திமுக பக்கம் இழுத்து கொண்டு வருவதற்கான அசைன்மென்ட் மதுரையை சேர்ந்த திமுக புள்ளி ஒருவரிடமும் தரப்பட்டிருந்ததாக கூறப்பட்டிருந்தது.
அதன்படியே அவரும், வலையைவீச, "திமுகவுக்கு வந்தால், மதுரை மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பதவி" வேண்டும் என்று சரவணன் கொக்கி போட்டதாக தெரிகிறது.

டாக்டர் சரவணன்
ஏற்கனவே மதுரையில் திமுகவின் பல சீனியர்கள் உள்ளபோது, அவர்களுக்கே முக்கிய பதவிகளை ஒதுக்கி தராத நிலையில், சரவணனுக்கு எப்படி இவ்வளவு பெரிய பதவியை தருவது என்று யோசித்ததாம் திமுக மேலிடம்.. சீட்டு தரவில்லை என்ற ஒரே காரணத்துக்காக, மாற்று கட்சிக்கு அதுவும் முற்றிலும் சித்தாந்த மாறுபாடுகள் நிறைந்த பாஜகவுக்கு சென்றுவிட்ட சரவணனுக்கு எப்படி இந்த பதவியை தருவது? அப்படியே தந்தாலும் மதுரை திமுகவுக்குள் மீண்டும் அதிருப்திகள் வெடிக்குமே? என்ற குழப்பத்தில் அமைதி காத்துள்ளது திமுக மேலிடமும்.

மிட்நைட்
இப்போது சிக்கல் என்னவென்றால், திமுகவில் மாவட்ட செயலாளர்களே, சரவணனுக்கு எதிராக உள்ளார்களாம். பி.மூர்த்தி, கோ.தளபதி, பொன்முத்து ராமலிங்கம், மணிமாறன் போன்றோர், சரவணனை மீது ஏற்கனவே அதிருப்தியில் உள்ள நிலையில், இப்போது மீண்டும் போர்க்கொடி உயர்த்தி உள்ளதாக தெரிகிறது. அதற்கேற்றபடி, அவரை திமுகவில் சேர்க்க இன்னும் பச்சை சிக்னல் கிடைக்கவில்லை.. 'சரவணனைக் கட்சியில் சேர்க்க வேண்டாம். அப்படி சேர்த்தால் அவர் இங்கேயும் வந்து குழப்பத்தை ஏற்படுத்துவார்" என பகுதிச் செயலாளர்கள் சிலர் திமுக தலைமைக்கு கடிதம் எழுதி இருக்கிறார்களாம். இதுகுறித்து மேலிடம் என்ன முடிவெடுக்கப்போகிறது என்று தெரியவில்லை.

பொறுப்பாளர்கள்
மதுரை திமுகவில் என்ன தான் நடக்கிறது என்பது குறித்து நாம் சிலரிடம் பேசினோம். அவர்கள் நம்மிடம் சொன்னதாவது: மதுரையில் மொத்தம் 4 பொறுப்பாளர்கள் உள்ளனர்.. மதுரை நகர் நகர் தெற்கு பகுதிக்கு கோ, தளபதி எம்எல்ஏ, மதுரை வடக்குக்கு பொன்முத்து ராமலிங்கம் பொறுப்பாளர்களாக உள்ளனர்.. அதேபோல, மதுரை புறநகரும் வடக்கு + தெற்காக பிரிக்கப்பட்டுள்ளது.. இதில், வடக்கு பகுதிக்கு பி.மூர்த்தியும், தெற்கு பகுதிக்கு மணிமாறனும் (சேடப்பட்டி முத்தையா மகன்) பொறுப்பில் உள்ளனர்.. இந்த 4 இடங்களுக்கும் மாவட்ட செயலாளர் போஸ்டிங்குக்கு போட்டி நிலவுகிறது.

சரவணன் போஸ்டிங்
இதில், மதுரை நகர் நகர் தெற்கு பகுதி பொறுப்பாளரான கோ, தளபதி, வடக்கு பகுதியின் மா.செ. பதவியை கேட்டு வருகிறாராம்.. அதேபோல, பொன்முத்து ராமலிங்கமும் இதே வடக்கு பகுதியின் மா.செ. பதவியை கேட்டு வருகிறார்.. இதே வடக்கு மாவட்ட மா.செ. பதவி தனக்கு வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளாராம் டாக்டர் சரவணன்.. பாஜகவில் நின்று, இதே வடக்கு தொகுதியில் தளபதியிடம் தோற்றவர் சரவணன்.. எனினும் மீண்டும் இதே வடக்கு பகுதி மா.செ. போஸ்டிங் கேட்டு வருகிறார். இதுதான் சரவணனுக்கு எதிர்ப்புகள் வலுக்க காரணம் என்கிறார்கள்..

பிடிஆர்
இதில், வடக்கு மா.செ. போஸ்டிங்கிற்கு பொன்.முத்துராமலிங்கம் பெயர்தான் பலமாக அடிபடுகிறதாம்.. இவர்தான் கட்சியின் சீனியர்.. கடந்த முறை தளபதியை அந்த தொகுதியில் வெற்றி பெற வைத்தவரும்கூட.. எனவே, இந்த முறை இவருக்கு புரமோஷன் கிடைப்பது உறுதி என்று கூறப்படுகிறது.. இன்னொரு தகவலும் வட்டமடிக்கிறது.. டாக்டர் சரவணனுக்கு பிடிஆரின் ஆதரவு ஓரளவு இருப்பதாக சொல்கிறார்கள். அன்றைய தினம், நள்ளிரவில் பிடிஆரை சந்தித்தபோதே, தன் நிலைப்பாடு + எதிர்பார்ப்பு குறித்து சரவணன் ஒருசிலவற்றை பேசியதாக சலசலக்கப்பட்டது..
-
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார்












Click it and Unblock the Notifications