மரிய வில்சனால் பட்ஜெட் உரையை எழுதியிருக்க முடியாது.. யாரோ எழுதிய உரை அது.. சாடிய பிடிஆர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: என்னுடைய கணிப்பில் தமிழக பட்ஜெட்டை அமைச்சர் மரிய வில்சன் எழுதி இருக்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். யாரோ எழுதி கொடுத்ததை படித்ததால் தான், அமைச்சர் பட்ஜெட் உரையை வாசிக்க கஷ்டப்பட்டதாகவும் விமர்சித்துள்ளார்.

சட்டசபைத் தேர்தலில் அடைந்த தோல்விக்கு பின் அரசியலில் இருந்து சில மாதங்கள் ஓய்வு எடுக்க உள்ளதாக திமுக முன்னாள் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருந்தார். தற்போது கலைஞர் நினைவு நாளன்று மதுரையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மீண்டும் ஆக்டிவ் பாலிட்டிக்ஸ் பக்கம் திரும்பி இருக்கிறார்.

PTR Palanivel Thiagarajan DMK Maria wilson

தவெகவின் முதல் பட்ஜெட் குறித்து கூட பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கருத்து கூறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், சட்டசபையில் சில நல்ல விதிகளை தவிர்த்து, சிலவற்றை மாற்ற வேண்டி இருக்கிறது.

மானியக் கோரிக்கையின் போது அமைச்சர் அவையில் படித்ததாக நினைத்து கொண்டு விவாதத்தை தொடங்குங்கள் என்கிறார். அதேபோல் பட்ஜெட் உரையை நிதியமைச்சராக இருந்த பலர் அவர்களாக எழுதவில்லை. நான் நிதியமைச்சராக இருந்த போது, அந்த உரையை நானே எழுதினேன். அந்த பட்ஜெட்டை நான் ஆங்கிலத்தில் முதலில் எழுதி, பின்னர் தமிழாக்கம் செய்தேன்.

அதன்பின் 2 முறை படித்துவிட்டு தான் சபையில் வாசித்தேன். பெரும்பாலும் 99% எந்த பேப்பரும் இல்லாமல் தான் பேசுவேன். புள்ளி விவரம் கூட மனதில் இருக்கும். 2 மணி நேரம் பேச வேண்டுமென்றால், நம்பர்களை மட்டும் குறித்து வைத்துவிட்டு பேசலாம். அது இயற்கையாக மக்களுக்கு கேட்கும் வகையில் இருக்கும்.

ஆனால் பட்ஜெட் உரையை 2 மணி நேரம் பிரிண்ட் செய்த பேப்பரில் படித்தால், எந்த பயனும் கிடையாது. ஏனென்றால் எளிதாக இணையத்தில் போட்டுவிடலாம். இவ்வளவு நேரம் பட்ஜெட் உரையை வாசிக்க வேண்டுமா என்பதை ஆலோசிக்கலாம். அதிகாரிகள் மரபையே மீண்டும் மீண்டும் செய்கிறார்களே தவிர, புதிதாக சிந்திக்க மறுக்கிறார்கள்.

என்னுடைய கணிப்பில் இந்த பட்ஜெட்டை இந்த நிதியமைச்சர் மரிய வில்சன் எழுதி இருக்க முடியாது. யாரோ எழுதி கொடுத்ததை படிப்பதால் கஷ்டம் வருகிறது. அதனால் பட்ஜெட் வாசிக்கும் முறையை மாற்றலாமா என்பதை சிந்திக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+